Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: சுற்றி வளைத்த இலங்கை வீரர்கள்.. தூக்கி அடித்த கேஎல் ராகுல்

காலே: லங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் , இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இரு துவக்க வீரர்களும் இந்திய அணிக்கு நிலையான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமான ரன் அவுட் காரணமாக ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார். முதல் செஷனில் முடிவில், ராகுல் 77 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

KL Rahul

முதலில் ராகுலுக்கு இலங்கை ஸ்பின்னர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி கடும் நெருக்கடியை கொடுத்தனர். முதலில் தடுமாறிய ராகுல், பின்னர், ஆக்கோரஷமாக சிக்சர் விளாசினார். பிரபாத் ஜெயசூர்யா வீசிய 16வது ஓவரின் முதல் பந்திலேயே அவர் அந்த சிக்சரை விளாசினார். ராகுல் தனது ஃபுட்டை சரியாகப் பயன்படுத்தி, பந்தின் திசையை கணித்து, பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் பந்தை கம்பீரமாக சிக்சருக்கு பறக்கவிட்டார்.

பாபர் அசாம் காயம்.. பயிற்சி போட்டியில் பந்து தாக்கி வலியால் துடித்தார்.. இங்கி. தொடரில் பின்னடைவு

பாபர் அசாம் காயம்.. பயிற்சி போட்டியில் பந்து தாக்கி வலியால் துடித்தார்.. இங்கி. தொடரில் பின்னடைவு

மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி 96 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தது. ராகுலின் கர்நாடக மாநில சக வீரரான படிக்கல் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரு பேட்டர்களும் நேர்மறையான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.

இலங்கையில் இதற்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் கொண்ட மூத்த வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், அணியின் துணை கேப்டனாகவும் இருப்பதால், பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணி அங்கு சுற்றுப்பயணம் செய்தபோது, வலது கை பேட்டரான ராகுல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டு அரைசதங்களுடன் 142 ரன்கள் எடுத்திருந்தார்.

BAN vs AUS: ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்மித்.. பேட்டிங்கில் மற்றொரு ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு

Also Read

BAN vs AUS: ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்மித்.. பேட்டிங்கில் மற்றொரு ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு

இலங்கை மண்ணில், தற்போதைய டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை, அவர் ஐந்து போட்டிகளில் விளையாடி 33.50 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 268 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக இலங்கைக்கு எதிராக, ஏழு டெஸ்ட் போட்டிகளில் (32.18 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 354 ரன்கள் எடுத்துள்ளார். இப்போட்டியின் முதல் பகுதியில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ள ராகுல், இதனைப் பெரிய ஸ்கோராக மாற்றி, இந்திய அணியை ஆரம்பத்திலேயே வலுவான நிலைக்குக் கொண்டு செல்ல இலக்கு வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Saturday, August 15, 2026, 14:20 [IST]
Other articles published on Aug 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+