Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: மானவ் சுதர் மாபெரும் சாதனை.. ஹர்பஜன், அஸ்வின் ரெக்கார்ட் முறியடிப்பு

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் மானவ் சுதர் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்குச் சிறப்பான வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இவரது அபாரமான பந்துவீச்சால், 372 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 206 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று, இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Manav suthar

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், மானவ் சுதர் வரலாற்று சாதனைக் புத்தகத்தில் புதிய இடத்தைப் பிடித்துள்ளார். ராஜஸ்தானில் பிறந்த இந்த இளம் கிரிக்கெட் வீரர், தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய நரேந்திர ஹிர்வானிக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சுதர் கடந்த ஜூன் 2026 இல் முல்லன்பூரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே அவர் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு முன், நரேந்திர ஹிர்வானி ஜனவரி 1988 இல் சென்னையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். பின்னர் நவம்பர் 1988 இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 6/59 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மற்எறாரு சாதனையில் ஹர்பஜன் சிங் வசம் இருந்த ஒரு ரெக்கார்டை சுதர் முறியடித்துள்ளார். ஹர்பஜன் சிங் கடந்த 2008 ஆம் ஆண்டு இதே காலே சர்வதேச மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக 10/153 விக்கெட்டுகளை வீழ்த்திய போது அவருக்கு வயது 28 ஆண்டுகள் மற்றும் 28 நாட்கள் ஆகும். ஆனால் மானவ் சுதருக்கு 24 வயது தான் ஆகிறது.

இருப்பினும், வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மிக இளைய இந்திய பந்துவீச்சாளர் என்ற ஒட்டுமொத்த பெருமை இர்பான் பதானையே சாரும்.இர்பான் பதான் தனது 20 வயது 44 நாட்களில், 2004 டிசம்பர் 10 இல் டாக்காவில் வங்கதேசத்திற்கு எதிராக 31 ஓவர்களில் 96 ரன்களுக்கு 12 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, August 19, 2026, 16:10 [IST]
Other articles published on Aug 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+