Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ஸ்டார் பவுலருக்கு இடமில்லை.. அஸ்வின் தேர்வு செய்த இந்திய அணி பிளேயிங் லெவன்

காலே: இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பிளேயிங் லெவனை ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார். இதில் முதல் ஐந்து வீரர்கள் பலரும் எதிர்பார்த்தபடியே அமைந்துள்ளனர். அதன்படி கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் டாப் ஆர்டரில் இடம் பெற்றுள்ளனர்.

6-வது இடத்தில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் சர்பராஸ் கானுக்கு பதிலாக, இரண்டாவது விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலை அஸ்வின் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பந்துவீச்சு பிரிவில் ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூவரை அவர் சேர்த்துள்ளார். இறுதியாக, 10 மற்றும் 11-வது இடங்களுக்கு குர்னூர் ப்ரார் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

Ind vs SL

இதன் மூலம் சர்பராஸ் கான், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தனது 15 பேர் கொண்ட அணியிலிருந்து அஸ்வின் நீக்கியுள்ளார். முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய ஒரு பயிற்சி போட்டியில், கடைசி நாளின் கடைசி ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி விறுவிறுப்பான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மறந்து விடுங்கள்.. இது தான் முக்கியம்.. இந்திய அணிக்கு அஸ்வின் அறிவுரை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மறந்து விடுங்கள்.. இது தான் முக்கியம்.. இந்திய அணிக்கு அஸ்வின் அறிவுரை

"டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியிடம் சில பலவீனங்கள் உள்ளன, ஆனால் இலங்கையிடம் அதைவிட அதிகமாகவே உள்ளன. அவர்களிடம் விக்கெட் எடுக்கும் ஸ்பின்னர்கள் இல்லை. இந்திய அணியில் ஜெய்ஸ்வால், பண்ட், ஜடேஜா, சுதர் மற்றும் படிக்கல் என பல இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரமேஷ் மெண்டிஸ் ஒரு நல்ல ஆஃப்-ஸ்பின்னர் தான் என்றாலும், லயன் மற்றும் லென்த் விஷயத்தில் இன்றைய நவீன கால ஸ்பின்னர்களைப் போலவே அவரும் சில தவறுகளைச் செய்கிறார்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

அஸ்வின் கணித்த பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதர், குர்னூர் ப்ரார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

இந்தியா இலங்கை டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், விக்கெட் யார் எடுப்பார்? ஸ்ரீகாந்த் கணிப்பு

Also Read

இந்தியா இலங்கை டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், விக்கெட் யார் எடுப்பார்? ஸ்ரீகாந்த் கணிப்பு

போட்டியை நடத்தும் இலங்கை அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லாததால், இத்தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் கேஷரா நுவந்தா ஆகிய மூன்று ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர். மேலும் சோனல் தினுஷா, தனஞ்செய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் பகுதி நேர ஸ்பின்னர்களாக பந்துவீசக்கூடியவர்கள் ஆவர்.

Story first published: Friday, August 14, 2026, 8:05 [IST]
Other articles published on Aug 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+