Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்களுக்கு சோக செய்தி.. இந்தியா - இலங்கை தொடர்.. கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது!

கொழும்பு: இலங்கை வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

India - Srilanka தொடர் ரத்தாகிறதா? BCCI என்ன செய்யும் | Oneindia Tamil

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய 'ஏ' அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதற்காக கடந்த 28ம் தேதியே கொழும்பு சென்றடைந்த இந்திய வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இந்த தொடரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுவிட்டு கடந்த 6ம் தேதியன்று தான் நாடு திரும்பியது. ஆனால் அந்த தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் மற்றும் நிர்வாகிகள் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அணி மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கையுடனான கடைசி ஒருநாள் போட்டிக்கு பின்னர் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இரு வாரியங்களும் பதற்றம்

இரு வாரியங்களும் பதற்றம்

இதனால் இலங்கை திரும்பியுள்ள அந்நாட்டு வீரர்கள் அனைவரும் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா உறுதியானாலும் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்படும் என்பதால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பதற்றத்தில் இருந்தது.

பரிசோதனை முடிவுகள்

பரிசோதனை முடிவுகள்

இந்நிலையில் வீரர்களின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் அனைவருக்குமே கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. எனினும் அவர்களுக்கு ஒரு பயிற்சி போட்டிகளுக்கு கூட அனுமதி வழங்கப்படாது என இலங்கை வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. ஆனால் இலங்கை வீரர்கள் அனைவரும் வரும் ஜூலை 12ம் தேதி வரை குவாரண்டைனில் வைக்கப்படவுள்ளனர்.

 மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

இலங்கை அணியின் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளும் மோசமான நிலையில் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடருக்கும் பயிற்சி இல்லை என்பதால் எப்படி விளையாடப்போகிறார்கள் என ரசிகர்கள் உற்று நோக்கியுள்ளனர்.

Story first published: Friday, July 9, 2021, 13:48 [IST]
Other articles published on Jul 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+