இது நியாயமா ரோகித் சர்மா.. நம்ப வைத்து மோசம் செய்ததாக குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, பகல் இரவு போட்டியாக பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிங்க் நிற பந்து இரவு நேரத்தில் ஸ்விங் ஆகும் என்பதால் இந்தியாவின் யுத்திகள் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, 2 வேகப்பந்துவீச்சாளருக்கு பதிலாக, 3 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

3 சுழற்பந்துவீச்சாளர்கள்
ஆனால், ஆடுகளம் காய்ந்த நிலையில் இருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும் என கணிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற யுத்தியில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், ரோகித் சர்மா ஜெயந்த் யாதவ்க்கு வாய்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ரோகித் ட்விஸ்ட்
ஆனால், காயத்திலிருந்து அணிக்கு திரும்பிய அக்சர் பட்டேலுக்கு ரோகித சர்மா வாய்ப்பு வழங்கிவிட்டார். அக்சர் பட்டேல் மேட்ச் பயிற்சி ஏதும் இல்லாமல் இருப்பதால் ஜெய்ந்த் யாதவ்க்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மா ட்விஸ்ட் வைத்துவிட்டார்.

ரோகித் அளித்த உறுதி
முதல் டெஸ்ட் போட்டி முடிவில் பேசிய ரோகித் சர்மா, ஜெயந்த் யாதவ் திறமையான வீரர் என்றும், அஸ்வின், ஜடேஜாவால் தொடர்ந்து விளையாடி கொண்டு இருக்க முடியாது என்பதால், ஜெயந்த் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கியதாகவும், இது போன்ற வீரர்களுக்கு ஒரு போட்டி என்று விட்டுவிடாமல் தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.

ஜெய்ந்த் ஏமாற்றம்
ரோகித் சர்மாவின் இந்த பேச்சால், இந்தியா 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் அந்த வாய்ப்பு ஜெயந்த் யாதவ்க்கு தரப்படும் என அவர் மிகவும் நம்பினார். தற்போது ரோகித்தின் முடிவால் அவர் ஏமாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரோகித் சர்மா, டாஸின் போது ஜெயந்த் யாதவ்க்கு வாய்ப்பு கிடைக்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றார்.


Click it and Unblock the Notifications