Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரைமணி நேரம் கூட நீடிக்கல.. பும்ராவின் அபார பந்துவீச்சு.. நடையை கட்டிய இலங்கை

பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது .

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியும் ரன் சேர்க்க முடியாமல் திணறியது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மாலை நேரத்தில் பிங்க் நிற பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் பும்ரா மற்றும் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி இலங்கை அணியின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினர். குசல் மெண்டிஸ் 2 ரன்களிலும், கருணரத்னே 4 ரன்களிலும், திரிமானே 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை திணறல்

இலங்கை திணறல்

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், நிதானமாக விளையாடிய மேத்தீயூஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 86 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இலங்கை வீரர்கள் தொடக்கத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்தனர்.

பும்ரா 5 விக்கெட்

பும்ரா 5 விக்கெட்

ஆனால் பும்ரா தனது வழக்கமான பந்துவீச்சு மூலம் இலங்கை வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார். எம்புல்தேனியா 1 ரன்னிலும், திக்வெல்லா 21 ரன்னிலும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் பும்ரா இந்திய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து லக்மல் மற்றும் ஃபெர்னான்டோ விக்கெட்டை அஸ்வின் கைப்பற்ற இலங்கை அணி 109 ரன்கள் மட்டுமே அடித்தது.

143 ரன்கள் முன்னிலை

143 ரன்கள் முன்னிலை

இது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அடித்துள்ள 2 வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இதன் மூலம் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி தற்போது 2வது இன்னிங்சில் விளையாடுகிறது. பேட்டிங் செய்ய கடுமையான சூழல் நிலவுவதால் இந்திய அணி குறைந்தபட்சம் 150 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கு அது போதுமானது.

Story first published: Sunday, March 13, 2022, 14:51 [IST]
Other articles published on Mar 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+