Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL 2nd ODI: வரலாற்றில் புதிய சாதனை.. இந்தியாவுக்கு வாய்ப்பு.. இலங்கைக்கு "தலைகுனிவு"

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இன்றைய 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஜெயிக்கும் பட்சத்தில், ஒரு டாப் கிளாஸ் சாதனை இந்தியா வசம் வந்து சேரவுள்ளது.

Recommended Video

IND VS SL கடைசிநேரத்தில் Srilanka Team அதிரடி Comeback | Oneindia Tamil

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான தொடர் சிறப்பாக தொடங்கிவிட்டது. முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பக்கா வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

இந்நிலையில், இன்று (ஜுலை.20) 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது. இதில் ஜெயிக்கும் பட்சத்தில், இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும்.

92 ஒருநாள் வெற்றி

92 ஒருநாள் வெற்றி

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், இந்த போட்டியை இந்திய அணி வென்றால் அருமையான சாதனையை படைக்க காத்திருக்கிறது. அதாவது ஒரே அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை வென்ற அணியாக இந்தியா புதிய சாதனை படைக்கும். இலங்கை அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஓவர்டேக் செய்யுமா இந்தியா?

ஓவர்டேக் செய்யுமா இந்தியா?

அதேபோல், பாகிஸ்தான் அணியும் இலங்கைக்கு எதிராக 92 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக 92 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. ஸோ, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 92 ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ள. இன்று இந்திய அணி இலங்கையை வெல்லும் பட்சத்தில், வெற்றி எண்ணிக்கை 93ஆக உயரும். இதன் மூலம், பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை விஞ்சி இந்திய அணி புதிய சாதனை படைக்கும்.

9வது சீரிஸ்

9வது சீரிஸ்

அதுமட்டுமின்றி, இலங்கைக்கு எதிரான தொடர்ந்து 9வது கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்லவிருக்கிறது. அதாவது, கடந்த 2007 முதல் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இன்று (ஜுலை. 20) இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக தொடர்ந்து 9வது முறையாக தொடரை வெல்லும்.

பாகிஸ்தான் முதலிடம்

பாகிஸ்தான் முதலிடம்

இதற்கு முன்பு, இந்திய அணி தொடர்ச்சியாக வெஸ்ட் இன்டீஸுக்கு 10 தொடர்களில் வென்றிருந்தது. இந்த பட்டியலில், பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 1996 முதல் 2020 வரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 11 தொடர்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 20, 2021, 16:58 [IST]
Other articles published on Jul 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+