வாழ்வா? சாவா? கட்டத்தில் இலங்கை.. ரோகித்துக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. வெற்றி தொடருமா?
தர்மசாலா: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்குகிறது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றிவிடும். இதனால் வாழ்வா சாவா கட்டத்தில் இலங்கை அணி உள்ளது.

இந்தியா பலம்
இலங்கையை காட்டிலும், இந்திய அணி பல மடங்கு பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது. முன்னணி பலர் விலகியதால், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு நல்ல வாய்ப்பாக இந்த தொடர் அமையும். காலை முதலில் இருந்தே மழை பெய்து வருவதால், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு தராது.

சாதகம்
மழை பொழிவு இருப்பதால், பனி இருக்காது. இதனால், 2வது பந்துவீசும் அணிக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஆனால் ஒரு வேலை மழை குறுக்கிட்டால் டி.ஆர்.எஸ். விதிப்படி ஸ்கோர் மாறும். இதனால் 2வது பேடடிங் செய்யும் அணிக்கே அது சாதகமாக இருக்கும்.

இந்தியா பந்துவீச்சு
இதனால் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரவு நேரத்தில் குளிர் அதிகமாக இருக்கும், அதனை மட்டும் சமாளித்து விளையாடனும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் ஃபெர்னான்டோ, தனுஷ்கா குனதிலக்கா இடம்பெற்றுள்ளனர்.

பிளேயிங் லெவன்
1,ரோகித் சர்மா, 2, இஷான் கிஷன், 3, ஸ்ரேயாஸ் ஐயர், 4, சஞ்சு சாம்சன், 5, தீபக் ஹூடா, 6, வெங்கடேஷ் ஐயர். 7, ரவிந்திர ஜடேஜா 8, புவனேஸ்வர் குமார். 9, ஹர்சல் பட்டேல், 10, பும்ரா 11 சாஹல்,


Click it and Unblock the Notifications