Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஷான் கிஷன் தலையில் பட்ட பந்து.. ஆட்டத்தை நிறுத்திய நடுவர்.. பரபர நொடிகள்

தர்மசாலா: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது இந்தய வீரர் இஷான் கிஷனுக்கு தலையில் பந்து பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது.

20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி 5 ஓவரில் 80 ரன்களை விளாசினர்.

ரோகித் ஏமாற்றம்

ரோகித் ஏமாற்றம்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் சேஸிங் அதிர்ச்சிக்கரமாக தொடங்கியது. இதனால் இஷான் கிஷன் பொறுப்புடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தலையில் பட்ட பந்து

தலையில் பட்ட பந்து

ஆட்டத்தின் 3 புள்ளி 2வது ஓவரில் சமிரா வீசிய ஷாட் பாலை இஷான் கிஷன் அடிக்க முயன்ற போது அது தலையை பதம் பார்த்தது. இதனால் இஷான் கிஷன் உடனே ஹெல்மட்டை கழற்றினார். இதனால் பதறி போன இலங்கை வீரர்களும் இஷான் கிஷனை நோக்கி ஓடி வந்து, அவரை பார்த்தனர். இதனையடுத்து நடுவரும் ஆட்டத்தை நிறுத்தி, மருத்துவர்களை அழைத்தார்.

மருத்துவர்கள் பரிசோதனை

மருத்துவர்கள் பரிசோதனை

உடனடியாக களத்திற்கு வந்த நடுவர்கள், இஷான் கிஷனுக்கு Concussion Test மேற்கொண்டனர். அப்போது இஷான் கிஷனிடம் விதிப்படி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சரியாக பதில் சொல்ல, மீண்டும் அவரை பேட்டிங் செய்ய நடுவர் அனுமதித்தார். ( உங்கள் பெயர் என்ன? உங்கள் சொந்த ஊர் என்ன? எந்த ஹோட்டலில் தங்கி இருக்கீர்கள் போன்ற கேள்விகள் கேட்கப்படும் என்பது கூடுதல் தகவல்)

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

இதனையடுத்து இஷான் கிஷன் 15 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு, இன்றைய ஆட்டத்தில் அவர் சொதப்பியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது. இஷான் கிஷன் இந்த வாய்ப்பை தவறவிட்டால், உலக கோப்பை அணியில் தனது இடத்தை இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 26, 2022, 22:17 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+