Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய வீரர் விலகல்.. அதிரடி வீரர் இந்திய அணியில் சேர்ப்பு- ரோகித் சர்மாவின் தடாலடி முடிவு

தர்மசாலா: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றிவிடும். இதனால் வாழ்வா சாவா கட்டத்தில் இலங்கை அணி உள்ளது.

ருத்துராஜ் விலகல்

ருத்துராஜ் விலகல்

இந்த நிலையில், இந்திய அணியிலிருந்து தீபக் சாஹர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில், சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டும் தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து, இந்திய அணி தற்போது இருக்கிற பேட்ஸ்மேன்களை வைத்து விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

ரோகித் முடிவு

ரோகித் முடிவு

இதனையடுத்து மாற்று வீரராக மணிஷ் பாண்டே, ஷாரூக்கான் அல்லது குர்னல் பாண்டியா ஆகிய மூவரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியது. ஆனால் ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் இவர்களை அணியில் சேர்த்தால், அது அவர்களது மாநில அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மாயங் அகர்வால்

மாயங் அகர்வால்

இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட மாயங் அகர்வால் இந்திய அணியுடன் இருந்தவாரே பயிற்சி செய்து வருகிறார். இதனால், ருத்துராஜ்க்கு மாற்று வீரராக மாயங் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். மாயங் அகர்வால் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடும் வீரர்.

Recommended Video

IPL 2022 அட்டவணையில் BCCI அதிரடி மாற்றம் : NoHome Advantage For MI | Oneindia Tamil
முக்கிய முடிவு

முக்கிய முடிவு

இதனால், அவருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கியுள்ளார். எனினும் மாயங் அகர்வாலுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படாது. அதே சமயம் அடுத்த போட்டி ஓய்வே இல்லாமல் நாளை நடைபெறுகிறது. இதனால், நாளைய ஆட்டத்தில் ரோகித் ஓய்வு எடுத்து கொண்டு மாயங் அகர்வாலை அணியில் விளையாட வைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, February 26, 2022, 17:27 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+