Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் எங்களுக்கு வேண்டாம்..! ரோகித் எடுத்த திடீர் முடிவு..! இந்திய அணியிலிருந்து இளம் வீரர் நீக்கம்

பெங்களூரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி பகல், இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஒரு ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால், இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

பிங்க் நிற பந்து, பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்துவதால், பெரும்பாலும் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்வார்கள். இதனால் இந்திய அணி தங்களைது யுத்தியை மாற்றிலாமா இல்லை, அதே ஃபார்முலாவை பயன்படுத்தலாமா என்ற யோசனையில் உள்ளனர்.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்துள்ள அக்சர் பட்டேல், கடைசி டெஸ்ட் போட்டிக்கு திரும்பியுள்ளார். இதனால் ஏற்கனவே அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அக்சர் பட்டேலை சேர்த்தால் அணியில் நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

ரோகித் அறிவுறுத்தல்

ரோகித் அறிவுறுத்தல்

இதனால் குல்தீப் யாதவ் தேவையில்லை என்று முடிவு எடுத்துள்ள ரோகித் சர்மா, அவரை ரஞ்சி போட்டியில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுவரை 7 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக இந்தியாவுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சென்னை டெஸ்ட்டில் களமிறங்கி 2 விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.

Recommended Video

Sachin முதல் Jadeja வரை! Test Cricket-டில் நடந்த Innings Declaration | OneIndia Tamil
சாஸ்த்ரி பாராட்டுக்கு பிறகு..

சாஸ்த்ரி பாராட்டுக்கு பிறகு..

குல்தீப் யாதவ் கடந்த 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்தார். அப்போது ரவி சாஸ்த்ரி, இனி குல்தீப் காலம் என்று பாராட்டினார். ஆனால் அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு அவர் டெஸ்ட் போட்டியிலேயே விளையாடவில்லை. தற்போது மீண்டும் டெஸ்ட் அணியில் ஒரு ஆண்டுக்கு பிறகு இடம்பெற்றும், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

Story first published: Tuesday, March 8, 2022, 15:33 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+