Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா , இலங்கை பகல் இரவு டெஸ்ட் - பிளேயிங் லெவன் - பிட்ச் ரிப்போர்ட்

பெங்களூரு : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் வரும் 12ஆம் தேதி பகல், இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

ஒரு ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக இரு அணிகளும் பெங்களுரு வந்தடைந்தனர். ஆனால் இந்தியா மொஹாலியில் நேற்றே பயிற்சியை தொடங்கிவிட்டது.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு பிங்க் நிற பந்து, பயன்படுத்தப்படுகிறது. இது இரவு நேரத்தில் மிண்ணொளியில் நன்றாக ஸ்விங் ஆகும். இதனால் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்க திட்டமிட்டுள்ளது. அப்படி இருந்தால் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு, முகமது சிராஜ் இந்திய அணியில் இடம்பெறுவார்.

நெருக்கடி

நெருக்கடி

இந்த நிலையில், காயத்திலிருந்து குணமடைந்துள்ள அக்சர் பட்டேல், கடைசி டெஸ்ட் போட்டிக்கு திரும்பியுள்ளார். ஆனால் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக பெரிய ஸ்கோர் அடிக்காத நிலையில், அவருக்கும் கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

விராட் கோலி கடைசியாக பகல் இரவு டெஸ்டில் தான் சதம் விளாசினார். அதன் பிறகு அவர் அடிக்கவில்லை. இதனால் இம்முறை அவர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெங்களூரு ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். பிங்க் நிற பந்து பேட்டிற்கு வருவதில் தொய்வாக இருக்கும். மாலை நேரங்களில் பந்து ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது.

Recommended Video

Ravindra Jadeja wanted me to declare, he is a selfless cricketer -Rohit | Oneindia Tamil
பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

எனினும் பனி பொழிவு இருந்தால் அது பந்துவீசும் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உத்தேச அணி 1, ரோகித் சர்மா, 2, மாயங் அகர்வால், 3. விஹாரி 4, விராட் கோலி 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7, ஜடேஜா 8, அஸ்வின் 9,அக்சர் பட்டேல் / முகமது சிராஜ், 10, முகமது ஷமி. 11, பும்ரா

Story first published: Thursday, March 10, 2022, 21:21 [IST]
Other articles published on Mar 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+