For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. இந்திய அணியில் இளம் சூறாவளி சேர்ப்பு.. இனி கஷ்டம் தான்

பெங்களூரு : இந்தியா, இலங்கைக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

இலங்கை அணி ஏற்கனவே டி20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், முதல் டெஸ்டிலும் படுதோல்வியை தழுவியது.

மூன்றே நாட்களில் போட்டி முடிவடைந்ததால், இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு எடுத்து கொள்ள கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்த நிலையில், வரும் 12ஆம் தொடங்கும் போட்டி பகல், இரவு டெஸ்ட் என்பதால், அதற்கு இந்திய அணி தயாராக சிறப்பு கவனம் செலுத்த உள்ளனர். ஏனெனில் இந்தியாவில் இதுவரை 2 சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் தான் நடைபெற்றுள்ளன. இந்தப் போட்டிக்காக இந்திய அணியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

பிங்க் நிற பந்து, இரவு நேரத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என்பதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பிங்க் நிற பந்து பேட்டுக்கு சரியாக வருவதில்லை. இதனால், பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்குமே சிரமமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

காயம் காரணமாக முதல் டெஸ்ட்டில் பங்கேற்காத அக்சர் பட்டேல், 2வது டெஸ்டில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஜெயந்த் யாதவ் கடைசி டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 5 டெஸ்டில் விளையாடியுள்ள அக்சர் பட்டேல், 36 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 5 முறை அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Recommended Video

Ravindra Jadeja’s 175 Not Best Knock Of His Test Career - Gambhir | Oneindia Tamil
இலங்கை

இலங்கை

இலங்கை அணியை பொறுத்தவரை போட்டியை டிரா செய்வதே மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யுத்தியை மாற்ற வேண்டிய நெருக்கடியில் இலங்கை அணி வீரர்கள் உள்ளனர். கடைசி டெஸ்டில் 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது. நிசாங்கா, அசலங்கா,மேத்தீயூஸ், திக்வெல்லா, தனஞ்செய்யா ஆகியோர் ரன் குவித்தால் மட்டுமே இலங்கை அணி வெற்றியை பற்றி யோசிக்க முடியம்.

Story first published: Tuesday, March 8, 2022, 11:17 [IST]
Other articles published on Mar 8, 2022
English summary
Ind vs SL 2nd test Day and Night – Axar Patel added in to the squad இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. இந்திய அணியில் இளம் சூறாவளி சேர்ப்பு.. இனி கஷ்டம் தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+