பிசிசிஐ முதுகில் குத்திய ஸ்ரீனாத்.. ! பெங்களூரு ஆடுகளம் குறித்து மோசமான அறிக்கை.. கடுப்பான கங்குலி
பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது பகல் இரவு டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களில் சுருண்டது.
143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில் ரிஷப் பண்டின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 2வது இன்னிங்சில் 303 ரன்கள் எடுத்தது.

3 நாட்கள்
இதனையடுத்து 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் கருணரத்னே சதம் விளாச, மற்ற வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி 208 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டி மூன்று நாட்களுக்குள் முடிந்தது.

சிரமம்
இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது. மேலும் பந்தின் பவுன்ஸ் சரியாக இல்லாததால் பேட்ஸ்மேன்களும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்தப் போட்டியில் கைப்பற்றப்பட்ட 39 விக்கெட்டில் 26 விக்கெட் சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்தது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மட்டும் 8 விக்கெட் சாய்த்தார்.

ஸ்ரீனாத் அறிக்கை
முதல் நாளில் மட்டும் 16 விக்கெட் வீழ்த்தப்பட்டது. 2வது நாளில் 14 விக்கெட்டும், மூன்றாவது நாளில் 9 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன. இதனிடையே, போட்டி நடுவரான முன்னாள் வீரர் ஸ்ரீநாத், பெங்களூரு ஆடுகளத்தை Below Average என்று தரச் சான்றிதழ் வழங்கியுள்ளார். இதனால் பெங்களூரு ஆடுகளத்துக்கு 1 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும். '

தடை விதிக்க வாய்ப்பு?
அடுத்த 5 ஆண்டுகளில் பெங்களூரு சின்னசாமி மைதானம் 5 டிமெரிட் புள்ளிகளை பெற்றால் , அங்கு ஒரு வருடத்திற்கு சர்வதேச போட்டிகள் அங்கு நடத்த தடைவிதிக்கப்படும். பெங்களூரு ஆடுகளம் முதல் நாளில் இருந்தே பந்து சுழன்று திரும்பியதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளம் பாதகமாக இருப்பதாகவும் )னாத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications