Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

படு தோல்வியை நோக்கி இலங்கை? ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் விழுந்தது.. சரியும் இலங்கை அணி

பெங்களூரு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது பகல் இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 16 விக்கெட்டுகள் சரிந்தன.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியும் ரன் சேர்க்க முடியாமல் திணறியது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 4 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் விளாசி 92 ரன்கள் சேர்த்தார்.

பும்ரா வேகம்

பும்ரா வேகம்

இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. மாலை நேரத்தில் பிங்க் நிற பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனால் பும்ரா வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஒரு முனையில் பந்து ஸ்விங் ஆக, இன்னொரு முனையில் அஸ்வின் 2 ஓவர் வீசினார். பும்ரா வீசிய 2வது ஓவரில் குசல் மெண்டீஸ் அவுட் ஆனார்.

முகமது ஷமி

முகமது ஷமி

பந்து ஸ்விங் ஆனதை தொடர்ந்து 2 பக்கமும் ரோகித் சர்மா வேகப்பந்துவீச்சை கொண்டு தாக்குதல் நடத்தினார். இதனை இலங்கை சற்றும் எதிர்பார்க்கவில்லை. பும்ரா வீசிய 3வது ஓவரில் திரிமானே பந்தை டிரைவ் செய்ய ஸ்ரேயாஸ் ஐயரிடம் பிடிப்பட்டார். பின்னர் முகமது ஷமி அபாரமாக பந்து வீச கருணரத்னே ஸ்டம்பை பதம் பார்த்தார்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

ஆட்டத்தின் 12வது ஓவரில் முகமது ஷமி தனஞ்செய்யாவுக்கு கடும் நெருக்கடி அளித்தார். இதில் ஒரு பந்து பின்காலில் பட்டது. ஆனால் கள நடுவர் அவுட் தர மறுத்தார். இதனையடுத்து ரோகித் சர்மா ரிவியூ கேட்க அது எல்பிடபிள்யூ அனுது. இதன் பின்னர் காயத்திலிருந்து திரும்பி விளையாடிய அக்சர் பட்டேல் அசலாங்கா விக்கெட்டை சாய்த்தார்.

Recommended Video

IND vs SL: Bengaluru Pink Ball Test Records | OneIndia Tamil
இலங்கை 86-6

இலங்கை 86-6

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும், நிதானமாக விளையாடிய மேத்தீயூஸ் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 86 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இன்னும் இலங்கை 166 ரன்கள் பின்தங்கிய நிலையில், நாளையும் 4 விக்கெட்டுகளை இந்தியா விரைவில் வீழ்த்தினால் இலங்கையின் தோல்வி உறுதியாகிவிடும்.

Story first published: Saturday, March 12, 2022, 21:57 [IST]
Other articles published on Mar 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+