Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வாலிடம் எல்லை மீறிய இலங்கை பவுலர்.. களத்தில் வெடித்த சர்ச்சை.. தடுத்து நிறுத்திய அம்பயர்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளிலேயே, இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையே மைதானத்தில் பெரும் மோதல் வெடித்தது. கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், அசிதா பெர்னாண்டோ வீசிய பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

அவர் அவுட் ஆகி பவிலியன் நோக்கித் திரும்பிய போது, அசிதா பெர்னாண்டோ ஆக்ரோஷமாகக் கொண்டாடினார். மேலும், ஜெய்ஸ்வாலை நோக்கி சில தேவையற்ற கருத்துக்களைக் கூறியதுடன், தனது முழங்கையால் அவரை இடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை வீரரின் இந்த அநாகரிகமான செயலால் அதிருப்தியடைந்த ஜெய்ஸ்வால், உடனடியாகத் திரும்பி அவருக்குப் பதிலடி கொடுத்தார்.

IND vs SL 2nd Test Yashasvi Jaiswal Clashes With Asitha Fernando in Colombo Test After Fiery Send-Off

இதனால் இருவருக்கும் இடையே மைதானத்திலேயே வாக்குவாதம் முற்றியது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க, மைதானத்தில் இருந்த மற்ற இலங்கை வீரர்கள் மற்றும் அம்பயர்கள் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஜெய்ஸ்வால் அமைதியாக வெளியேறிய நிலையிலும் பெர்னாண்டோ வம்பிழுத்ததால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் ஜெய்ஸ்வால் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. கொழும்பிலும் அவர் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதனைப் பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஏமாற்றம் அளித்துள்ளார்.

யார் இந்த சரண்ஷ் ஜெயின்? 33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்

யார் இந்த சரண்ஷ் ஜெயின்? 33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்

முன்னதாக, இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்வதாக சுப்மன் கில் டாஸின் போது கூறியிருந்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவுக்குப் பதிலாக அறிமுக வீரர் சரண்ஷ் ஜெயின் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் வென்றுள்ள இந்திய அணி, இந்த இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகும்.

Story first published: Sunday, August 23, 2026, 12:55 [IST]
Other articles published on Aug 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+