Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL - இந்திய அணியில் இன்று 3 மாற்றம் நிகழ வாய்ப்பு.. 27 ஆண்டு ரெக்கார்டை முறியடிக்குமா இலங்கை

கொழும்பு : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2:30 மணிக்கு கொழும்பு நகரில் நடைபெறுகிறது. இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது தொடரை தோற்கும் நிலையில் இந்தியா இருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டி டையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து தொடரை வெல்ல வேண்டும் என்றால் இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தியா தொடரை சமன் செய்ய வேண்டுமென்றால் கடைசி போட்டியில் ஜெயிக்க வேண்டும்.

ind vs sl india sri lanka

கடந்த 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா இழந்தது இல்லை என்ற ரெக்கார்ட் இன்று முடிவுக்கு வருமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சில் பெரிய குறை இல்லை. இலங்கையின் கடைசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய வீரர்கள் போராடுகிறார்கள்.

வேகப்பந்து வீச்சில் பும்ரா, சமி இல்லாதது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்திய அணியில் உள்ள பெரிய பிரச்சினையை நடுவரிசை வீரர்கள் தான். ரோகித் சர்மாவுக்கு பிறகு எந்த ஒரு வீரரும் சரியாக விளையாடுவதில்லை. இந்திய அணியின் கிங் என்று அழைக்கப்படும் விராட் கோலி, கடந்த 15 இன்னிங்ஸ்களில் ஒரே ஒருமுறை தான் அரை சதம் அடித்திருக்கிறார்.

இதனால் அவர் நாளைய ஆட்டத்தில் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதேபோன்று பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் மிகவும் மோசமாக விளையாடி வரும் வீரராக சிவம் துபே இருக்கிறார்.
இதனால் துபே நீக்கப்பட்டு ரியான் பராக் அந்த இடத்தில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபோன்று விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் அணிக்குள் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் என இரண்டு வீரர்கள் ஒருவர் அணியை விட்டு வெளியேற நேரிடும். இன்றைய ஆட்டத்தில் மழை அவ்வப்போது குறுக்கிடும் என்று கணிக்கப்பட்டாலும், போட்டி ரத்தாகும் அளவுக்கு மழை இருக்காது என தெரிகிறது.

Story first published: Wednesday, August 7, 2024, 7:30 [IST]
Other articles published on Aug 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+