Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND VS SL இன்று கடைசி டி20..!! இந்திய அணிக்கு புதிய கேப்டன்..!! பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்

தர்மசாலா: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தொடங்குகிறது.

இந்த தொடரை இந்திய அணி ஏற்கனவே வென்ற நிலையில், தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

இலங்கை அணி ஒரு போட்டியிலாவது வெல்லும் முனைப்புடன் உள்ளது. சம்பிரதாய ஆட்டமாக கருதப்படும் இந்தப் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்.

ரோகித் ஓய்வு?

ரோகித் ஓய்வு?

இந்திய அணி தொடர்ந்து 2 போட்டிகளை ஓய்வே இன்றி விளையாடுகிறது. இதன் காரணமாக ரோகித் சர்மா இன்றைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து நேற்று பேசும் போது, ஓய்வு முக்கியம் தான், நான் கடைசி போட்டியில் விளையாடுவது குறித்து அணி நிர்வாகம் முடிவு எடுக்கும் என்று ரோகித் சர்மா கூறினார்.

மாய்ங அகர்வால்

மாய்ங அகர்வால்

இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்ற போதிலும், அப்படி ரோகித் ஓய்வு எடுத்தால், இந்திய அணியின் துணை கேப்டனான பும்ரா, இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக களமிறங்கலாம். இல்லை எனில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படலாம். அதே போன்று நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் மாயங் அகர்வால் ரோகித்துக்கு பதிலாக களமிறங்கலாம்.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இன்றைய போட்டியில் பேட்டிங் வரிசையிலும் சில மாற்றங்களை கொண்டு வர டிராவிட் முடிவு எடுத்துள்ளதார். அதன்படி சஞ்சு சாம்சன் அல்லது வெங்கடேஷ் ஐயரை தொடக்க வீரராக களமிறக்க ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதே போன்று நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது. இதனால் அவருக்கும் இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது.

பந்துவீச்சில் மாற்றம்

பந்துவீச்சில் மாற்றம்

இதே போன்று பந்துவீச்சில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது சிராஜ்க்கும், சாஹலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரவி பிஸ்னாய் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை, முதல் போட்டியை விட இரண்டாவது போட்டியில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் ஃபில்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி கவனம் செலுத்த வேண்டும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

உத்தேச இந்திய அணி 1, சஞ்சு சாம்சன், 2, மாயங் அகர்வால் 3,ரோகித் சர்மா, 4,ஸ்ரேயாஸ் ஐயர், 5, வெங்கடேஷ் ஐயர், 6, ஜடேஜா, 7, தீபக் ஹூடா, 8, ஹர்சல் பட்டேல் 9, முகமது சிராஜ், 10, பும்ரா, 11, ரவி பிஸ்னாய்

Story first published: Sunday, February 27, 2022, 14:28 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+