Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடுத்தடுத்து விழுந்த விக்கெட்.. இறுதியில் அதிரடி காட்டிய இலங்கை கேப்டன்.. சாதிப்பாரா ரோகித்?

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாஸை இழந்து முதலில் பந்துவீசி வருகிறது.

தொடர்ந்து 2 போட்டிகள் நடைபெறுவதால், இன்று புதிய ஆடுகளம் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அனல் பறக்கும் பந்துவீச்சு

அனல் பறக்கும் பந்துவீச்சு

ஆட்டத்தின் முதல் ஓவரை இந்திய வீரர் சிராஜ் வீசினார். சிராஜ் தனது உயரத்தை அழகாக பயன்படுத்தி பந்தை நன்றாக பவுன்ஸ் மற்றும் ஸ்விங் செய்தார். இதனால் இலங்கை அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் கடுமையாக திணறினர். முதல் ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா ஷாட் ஆட முற்பட்டு, பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்டம்புள் சிதறின.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

இதனைத் தொடர்ந்து 2வது ஓவரை இந்திய வீரர் ஆவேஷ் கான் வீசினார். ஆவேஷ் கானும் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடினாரோ, அதே போல் அனல் பறக்க பந்துவீச, இலங்கை அணி வீரர்கள் எப்படி டா இந்த ஓவரை எதிர்கொள்வது என்று திணறினர். 2வது ஓவரின் 5வது பந்தில் கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய நிசாங்கா தூக்கி அடித்து 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இது ஆவேஷ் கானின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும்.

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

அடுத்தடுத்து ஆட்டமிழப்பு

இதனையடுத்து, மீண்டும் அவேஷ் கான் 4வது ஓவரை வீச, விட்டால் போதும் டா என்பது போல் இலங்கை வீரர்கள் கதி கலங்கினர். குறிப்பாக அசலங்கா தூக்கி அடிக்க முற்பட்டு, பந்து உயரத்திற்கு செல்ல, அதனை சஞ்சு சாம்சன் பிடித்தார். இதனால் 4 ஓவர் முடிவில் இலங்கை அணி பவர் பிளே முடிவில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

சனாகா அதிரடி

சனாகா அதிரடி

இதே போன்று அசலங்கா, லியாங்கே, சந்திமாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியில் சனாகா 38 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் இலங்கை அணி 68 ரன்கள் எடுத்தது.

Story first published: Sunday, February 27, 2022, 20:55 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+