Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈரமான பிட்ச்சை காயவைக்க “நவீன மெஷின்”.. மானத்தை வாங்கிய பிசிசிஐ.. கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!

Recommended Video

மழை காரணமாக ஆட்டம் ரத்து #INDvSL

கவுஹாத்தி : இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.

இந்தப் போட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட பிட்ச்சை காய வைக்க பிசிசிஐ மற்றும் கவுஹாத்தி மைதான அமைப்பு பயன்படுத்திய நவீன மெஷின்களை கண்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளன. இந்த தொடரின் முதல் டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற இருந்தது.

டாஸ் போடப்பட்டது

டாஸ் போடப்பட்டது

போட்டி நாளன்று மதிய நேரத்தில் அங்கே மழை பெய்தது. எனினும், போட்டிக்கான டாஸ் 6.30 மணிக்கு போடப்பட்ட போது மழை பெய்யவில்லை. அதனால், அனைவரும் போட்டி முழுதாக நடைபெறும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

மழையால் தடை

மழையால் தடை

இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். எனினும், அதன் பின் மழை பெய்தது. இதையடுத்து நீண்ட நேரம் போட்டி பாதிக்கப்பட்டது.

வாக்குவம் கிளீனர் வைத்து..

வாக்குவம் கிளீனர் வைத்து..

இடையே மழை நின்ற போது ஆடுகளம் சில இடங்களில் ஈரப்பதமாக இருந்தது. இதையடுத்து "வாக்குவம் கிளீனர்" வைத்து அந்த இடங்கள் காய வைக்கப்பட்டு வந்தது. எனினும், அது பயனளிக்கவில்லை.

நவீன மெஷின்கள்

நவீன மெஷின்கள்

இதையடுத்து கடைசி முயற்சியாக தலைமுடி காய வைக்கும் "ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ்" ஆகியவை எடுத்து வரப்பட்டது. அதன் மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி செய்தனர் ஊழியர்கள்.

அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

ஆடுகளத்தை காயவைக்க கொண்டு வரப்பட்ட அந்த இரண்டு "நவீன மெஷின்களை" வைத்து பிசிசிஐ செய்த காமெடி காட்சியை கண்டு ரசிகர்கள் பலரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

திட்டு

திட்டு

ஆடுகளத்தை காய வைக்க பல நவீன முறைகள் இருக்கும் நிலையில், பணக்கார பிசிசிஐ ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறது? என்று திட்டித் தீர்த்தனர் ரசிகர்கள்.

சரியில்லை

சரியில்லை

அதே போல, ஆடுகளத்தை மூடி இருந்த உறைகள் சரியில்லாத காரணத்தால் தான் மழை நீர் ஆடுகளத்திற்குள் இறங்கியது. இதையும், கேள்வி கேட்டுள்ளனர் சில ரசிகர்கள்.

டி20 தொடர்

டி20 தொடர்

முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அடுத்து வரும் இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இந்தியா டி20 தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

Story first published: Sunday, January 5, 2020, 22:56 [IST]
Other articles published on Jan 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+