
தரமான அணி
இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இலங்கைக்கு அனுப்பி இருந்ததால், பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இறுதியில் ஒரு பலமான அணியை கோச் ராகுல் டிராவிட், கேப்டன் ஷிகர் தவான் இணைந்து தேர்வு செய்துள்ளனர்.

3 ஸ்பின்
அதன்படி, இந்திய அணியில் ஷிகர் தவான் (c), பிருத்வி ஷா, இஷான் கிஷன் (w), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி 2 ஃபாஸ்ட் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. வேகப்பந்துவீச்சில் இருவர் மட்டும் இருப்பதால், ஹர்திக் பாண்ட்யா 3வது பவுலராக களமிறங்கியுள்ளார். காயம் காரணமாக அவர் பந்துவீசுவது சந்தேகம் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியில் பாண்ட்யா பந்துவீசி வருகிறார்.

ராஜபக்ஷே உறவினர்
அதேசமயம், இலங்கை அணியில் பனுகா ராஜபக்ஷே எனும் வீரர் இன்று அறிமுகமாகியுள்ளார். இலங்கையின் முன்னாள் அதிபரும் இந்நாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ஷேவின் உறவினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயது 29. ராஜபக்ஷேவின் உறவினர் என்றபோதும், 10 ஆண்டுகளாக தேசிய அணியில் இடம்பிடிக்க இவர் கடுமையாக போராடி வந்ததாக தெரிகிறது.

24 ரன்களில் அவுட்
பனுகா ராஜபக்சே நியூசிலாந்தில் 2010 ஆம் ஆண்டு, 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடருக்கு பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இலங்கை அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர் இவர் தான். மொத்தம் 253 ரன்கள். U-19 அணியில் மிகச் சிறப்பாக விளையாடிய இவரது ரோல் மாடல் ஆடம் கில்கிறிஸ்ட். அவரைப் போலவே இடது கை அதிரடி வீரராக வேண்டும் என்பதே இவரது கனவாம். இன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கூட, சாஹல் ஓவரில் சிக்ஸரெல்லாம் அடுத்த பனுகா, குல்தீப் ஓவரில் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு 24 ரன்களில் வெளியேறினார்.


Click it and Unblock the Notifications











