Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினின் டி20 ரெக்கார்டு காலி.. உடைத்து எறிந்த இந்திய வீரர்.. மிரட்டல் சாதனை!

Recommended Video

Bumrah beat Ashwin record| அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பும்ரா

புனே : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் முதல் இடம் பிடித்து சாதித்தார்.

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்த சாதனையை செய்தார் பும்ரா.

இந்த சாதனை மூலம் அஸ்வினின் நீண்ட நாள் சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா.

பும்ரா காயம்

பும்ரா காயம்

கடந்த சில மாதங்களாக பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்தார். அதனால், அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. டி20 தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வினை முந்த இரண்டு விக்கெட்கள் தேவையாக இருந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு காயம் காரணமாக தள்ளிப் போனது.

பல தொடர்களில் ஆடவில்லை

பல தொடர்களில் ஆடவில்லை

பும்ரா காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் பங்கேற்கவில்லை. இதில் இரு டெஸ்ட் தொடர்கள், மூன்று டி20 தொடர்கள் மற்றும் ஒரு ஒருநாள் தொடர் அடங்கும்.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

காயத்தில் இருந்து மீண்ட அவர் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். பும்ரா மீண்டும் நீண்ட இடைவேளைக்கு பின் வருகிறார் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

லேசான தடுமாற்றம்

லேசான தடுமாற்றம்

முதல் டி20 தொடர் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் டி20 போட்டியில் பும்ரா பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் லேசான தடுமாற்றத்தை சந்தித்தார். அவரது அச்சுறுத்தும் பந்துவீச்சை நம்மால் பார்க்க முடியவில்லை. அந்தப் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

சாதனை செய்தார்

சாதனை செய்தார்

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசிய பும்ரா வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதன் மூலம் சாதனை செய்தார்.

அஸ்வின் சாதனை முறியடிப்பு

அஸ்வின் சாதனை முறியடிப்பு

டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் - சாஹல் இருவரையும் முந்தி 53 விக்கெட்களுடன் முதல் இடம் பெற்றார் பும்ரா. அஸ்வின், சாஹல் இருவரும் 52 விக்கெட்களுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பின்தொடரும் சாஹல்

பின்தொடரும் சாஹல்

அஸ்வின் டி20 போட்டிகளில் இடம் பெறாத நிலையில், சாஹல் பும்ராவின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. புவனேஸ்வர் குமார் 41, குல்தீப் யாதவ் 39, ஹர்திக் பண்டியா 38 அடுத்த இடங்களில் உள்ளனர்.

Story first published: Saturday, January 11, 2020, 12:47 [IST]
Other articles published on Jan 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+