Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு சாதனையா? தெறிக்கவிட்ட தோனி - ஜடேஜா.. ரெக்கார்டு முறியடிப்பு! #INDvsSL

Recommended Video

World Cup 2019 : பேச முடியாமல் திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்.. முகத்தில் கரியை அள்ளி பூசிய ஜடேஜா!

லீட்ஸ் : இந்தியா - இலங்கை அணிகள் மோதிய லீக் போட்டியில் தோனி - ரவீந்திர ஜடேஜா இணைந்து ஒருநாள் போட்டியில் புதிய சாதனை புரிந்தனர்.

இலங்கை அணிக்கு எதிராக தன் கடைசி லீக் போட்டியில் இந்தியா மோதியது. இந்தப் போட்டியில் ஜடேஜா - தோனி இணைந்து இந்திய அளவில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளனர்.

இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - பந்துவீச்சாளர் ஜோடியாக மாறியுள்ளனர் தோனி - ஜடேஜா.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு

ஜடேஜாவுக்கு வாய்ப்பு

உலகக்கோப்பை தொடரில் இது வரை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார் ஜடேஜா. இந்த நிலையில், முக்கியத்துவமற்ற இலங்கை போட்டியில் ஷமி நீக்கப்பட்ட நிலையில், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார்.

அதிரடி விக்கெட்

அதிரடி விக்கெட்

தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா, தான் வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்திலேயே இலங்கை அணியின் குசால் மென்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். குசால் மென்டிஸ் கிரீஸை விட்டு ஏறி வந்த போது, பந்தை தவற விட்டார். தோனி பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

சாதனை ஜோடி

சாதனை ஜோடி

இந்த விக்கெட் தோனி - ஜடேஜா ஜோடி ஒருநாள் போட்டிகளில் வீழ்த்தும் 29வது விக்கெட் ஆகும். இதன் மூலம், இந்திய அளவில் விக்கெட் கீப்பர் - பந்துவீச்சாளர் ஜோடிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர். இந்த 29 விக்கெட்களில் 19 ஸ்டம்பிங், 10 கேட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய சாதனை

முந்தைய சாதனை

இதற்கு முன்பு நயன் மோங்கியா - வெங்கடேஷ் பிரசாத் ஜோடி 28 விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததே இந்திய அளவில் அதிகமாக இருந்தது. அதை முறியடித்துள்ளது தோனி - ஜடேஜா ஜோடி. இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பது தோனி - ஹர்பஜன் சிங். இவர்கள் இணைந்து 25 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர்.

ஜடேஜா பதிலடி

ஜடேஜா பதிலடி

இந்தப் போட்டியில் ஜடேஜா 10 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த சிறப்பான பந்துவீச்சு மூலம், தன்னை மோசமாக விமர்சித்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு பதிலடி கொடுத்தார்.

Story first published: Saturday, July 6, 2019, 19:32 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+