Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிறப்பான சம்பவம்.. பேச முடியாமல் திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்.. முகத்தில் கரியை அள்ளி பூசிய ஜடேஜா!

Recommended Video

World Cup 2019 : பேச முடியாமல் திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்.. முகத்தில் கரியை அள்ளி பூசிய ஜடேஜா!

லீட்ஸ் : உலகக்கோப்பை தொடரில் ஜடேஜா இதுவரை வாய்ப்பு பெறாமல் இருந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்றார்.

அவர் வாய்ப்பு பெற்ற போதே ரசிகர்கள் குஷியானார்கள். அதற்கு முக்கிய காரணம் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சில நாட்கள் முன்பு ஜடேஜா குறித்து மோசமாக பேசி இருந்தார்.

மஞ்ச்ரேக்கர் அடாவடி

மஞ்ச்ரேக்கர் அடாவடி

ஒரு பேட்டியின் போது, ஜடேஜாவுக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பது குறித்து கருத்து தெரிவித்த மஞ்ச்ரேக்கர், ஜடேஜாவ்று பகுதி நேர வீரர். முழுமையான வீரர் இல்லை என்பதை குறிக்கும் வகையில் "bits and pieces player" என குறிப்பிட்டார்.

கடுப்பான ஜடேஜா

கடுப்பான ஜடேஜா

அந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியது. இந்திய அணிக்காக எத்தனையோ போட்டிகளை தன் சிறப்பான பந்துவீச்சின் மூலம் வென்று கொடுத்துள்ள ஜடேஜாவை மட்டமாக பேசியது சர்ச்சை ஆனது.

கடும் பதிலடி

கடும் பதிலடி

ஜடேஜா அதற்கு ட்விட்டரில் கடுமையாக பதிலடி கொடுத்தார். "நான் ஆடியதில் பாதி அளவு போட்டிகளில் கூட நீங்கள் விளையாடியதில்லை. உங்கள் வார்த்தை "டயரியா"வை நிறுத்துங்கள்" என்று கடுமையாக விளாசினார்.

முதல் அடி

முதல் அடி

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவை அணியில் சேர்த்தது இந்திய அணி. இதுவே மஞ்ச்ரேக்கருக்கு கிடைத்த பதிலடியாக பார்க்கப்பட்டது. ரசிகர்கள் அப்போதே குஷியானார்கள். எல்லை மீறி வர்ணனை செய்து வரும் மஞ்ச்ரேக்கருக்கு ஜடேஜா களத்தில் பதிலடி கொடுக்க வேண்டும் என காத்திருந்தனர்.

கரியை பூசிய ஜடேஜா

கரியை பூசிய ஜடேஜா

ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே அந்த சிறப்பான சம்பவம் நடந்தது. 11வது ஓவரை வீசினார் ஜடேஜா. அது தான் போட்டியில் அவரின் முதல் ஓவர். அனுபவ பந்துவீச்சாளரான ஜடேஜா, தன் நான்காவது பந்திலேயே குசால் மென்டிஸ் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஸ்டம்பிங்

ஸ்டம்பிங்

குசால் மென்டிஸ், ஜடேஜா வீசிய பந்தை அடிக்க கிரீஸை விட்டு தாண்டி வெளியே வந்தார். பந்தை அவர் தவறவிட தோனி பந்தை பிடித்து எப்போதும் போல,. மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார். அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அவர் பேச்சு ஒரு கணம் தடுமாறியது.

திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்

திக்கித் திணறிய மஞ்ச்ரேக்கர்

"முதலில் பந்து திரும்பியது. அவர் விக்கெட் எடுத்தார்" என்று சொன்ன மஞ்ச்ரேக்கர், அடுத்து என்ன பேசுவது என புரியாமல் திணறினார். பின்னர் ஜடேஜாவுக்கு ஏற்ற ஆடுகளம் என்று கூறி சமாளித்தார். ஜடேஜா ட்விட்டரில் கொடுத்த பதிலடியை விட இந்த பதிலடி அதிரடியாக இருந்தது. ரசிகர்கள் இதைக் கொண்டடி வருகிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 16:58 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+