Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு நடுவே வானில் பறந்த விமானம்.. காஷ்மீர் போராளிகள் அத்துமீறல்.. பெரும் பரபரப்பு! #INDvsSL

Recommended Video

INDvsSL | போட்டிக்கு நடுவே வானில் பறந்த விமானம்... மைதானத்தில் ஏற்பட்ட பதட்டம்

லீட்ஸ்: இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியின் இடையே வானில் பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தன் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை சந்தித்தது.

இந்தியா ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பெரிய பரபரப்பின்றி இந்தப் போட்டியில் பங்கேற்றது.

வானில் பறந்த விமானம்

வானில் பறந்த விமானம்

இந்த நிலையில் தான் போட்டி துவங்கி சில ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட பின், வானில் விமானம் ஒன்று சென்றது. அதன் பின்னே "காஷ்மீருக்கு நீதி" என்று எழுதப்பட்ட வாசகம் பறக்கவிடப்பட்டது.

காஷ்மீர் போராளிகளா?

காஷ்மீர் போராளிகளா?

காஷ்மீர் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் அந்த விமானத்தை பயன்படுத்தி இருக்கலாம். அந்த விமானம் பல முறை மைதானத்தை சுற்றி வலம் வந்தது. இதனால் போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு கேள்விக் குறி

பாதுகாப்பு கேள்விக் குறி

போட்டி இதனால் நிறுத்தப்படவில்லை என்றாலும், மைதானத்தில் அமர்ந்து இருந்த ரசிகர்கள் சிலர் பீதி அடைந்தனர். ட்விட்டர் மற்றும் பிற சமூக வலை தளங்களில் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டனர். உலகக்கோப்பை தொடரில் இது போல இரண்டாவது முறையாக இப்படி நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் போட்டி

ஆப்கானிஸ்தான் போட்டி

இதற்கு முன்பு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியில் இதே போல நடந்தது. பலுசிஸ்தான் என்ற பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி ஒரு விமானம் வானில் பறந்தது.

கைகலப்பு

கைகலப்பு

அப்போது பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு மூண்டது. காவல்துறை வந்து அதை தடுக்கும் வரை சென்றது. அப்போதே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தன் கவலையை தெரிவித்தது. இனி இது போல நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

காரணம் யார்?

காரணம் யார்?

ஆனால், தற்போது மீண்டும் இந்தியா ஆடும் போட்டியில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. இந்திய ரசிகர்கள், பாகிஸ்தான் தான் இந்த வேலையை செய்துள்ளது என கூறி வருகிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 18:15 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+