Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மயங்க் அகர்வாலுக்கு பெஞ்சு தான் கிடைக்கும்.. மேட்ச்சில் ஆட வாய்ப்பெல்லாம் கிடைக்காது!

லீட்ஸ் : இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் சில ஆச்சரிய மாற்றங்கள் காத்திருந்தது.

இந்தியா - இலங்கை அணிகள் தங்கள் கடைசி லீக் போட்டியில் மோதின. இந்தப் போட்டியின் வெற்றி - தோல்வி இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்காது என்ற நிலையில், இந்திய அணி சில பரிசோதனை முயற்சிகளை செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதே போல இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருந்தது. ஆனால், மயங்க் அகர்வாலுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் மாற்றம்

சாஹல் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெற்றார். ஷமி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குள் திரும்பினார். அடுத்து தினேஷ் கார்த்திக் தொடர்ந்து வாய்ப்பு பெற்றார். இவருக்கு இடம் கிடைக்காது என சில விமர்சகர்கள் கருத்து கூறி இருந்தனர். எனினும் தினேஷ் கார்த்திக் வங்கதேசப் போட்டியை தொடர்ந்து இலங்கை போட்டியிலும் வாய்ப்பு பெற்றார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், துவக்க வீரரான அவர் ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் அவர் இடத்தை நிரப்பவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. மயங்க் அகர்வால் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், துவக்க வீரரான அவர் ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் அவர் இடத்தை நிரப்பவே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிகிறது. மயங்க் அகர்வால் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய அனுபவம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெஞ்ச் வீரர் மட்டுமே!

பெஞ்ச் வீரர் மட்டுமே!

முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அரையிறுதி, இறுதி போன்ற முக்கிய போட்டிகளில் அவரை பயன்படுத்த வாய்ப்பே இல்லை. ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் கூட இவரை அணியில் சேர்க்க வாய்ப்பு குறைவு தான். அப்படிப் பார்த்தால், மயங்க் அகர்வால் உலகக்கோப்பை முடியும் வரை பெஞ்ச்சில் தான் உட்கார்ந்து இருக்க வேண்டும். விளையாட வாய்ப்பு கிடைக்காது!

Story first published: Saturday, July 6, 2019, 16:16 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+