மும்பை : அனுபவ வீரர்கள் குறிப்பிட்ட ஆட்டங்களின் சூழ்நிலை புரிந்துக் கொண்டு நின்று ஆடி அவர்கள் அணி வெற்றி பெற பெரிதும் உதவிய நிகழ்வுகளில் சில.
1975 ல் முதல் ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி வெற்றி
பெற்றது இறுதி ஆட்டத்தில் யாவரும் அறிந்ததே. க்ளைவ் லாயிட் அதிரடி சதம் ஒரு காரணம்.

அதே சமயத்தில் அடுத்த முனையில் அனுபவ வீரர் ரோஹன் கன்ஹாய் நின்று ஆடி, லாயிட்டுக்கு தேவையான கம்பெனி கொடுத்தார், பேட்டிங்கில். இவர் அதிக பட்ச 105 பந்துக்களை எதிர் கொண்டு எடுத்த அந்த 55 ரன்களும் ( 8 x 4 ) அன்று களத்தில் நின்ற அந்த நேரமும் மிக முக்கியமாக கருதப் படுகின்றது இவரது அணியின் வெற்றிக்கு.
1971ல் இந்திய அணி, மேற்கு இந்திய தீவுக்களின் போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானம். ( 2 வது டெஸ்ட்) இந்திய அணி வென்று சரித்திர புகழ் பெற்ற சாதனை புரிந்தது.
இந்த டெஸ்டில் வெற்றி பெற உதவிய சில வீரர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. அதிலும் பேட்டிங்கில் அனுபவ வீரர் திலிப் ஸர்தேசாயின் 11 பவுண்டரிகள் கொண்ட சதம் (112 ரன்கள் ) தனித்துவம் கொண்டது. இந்த டெஸ்டில் இவர் ஒருவர் மட்டும் தான் சதம் எடுத்தார்.
இந்த தொடரில் இந்த அனுபவ வீரர் எடுத்த ரன்கள் 642.
(212 ( முதல் டெஸ்ட் )150 (நான்காவது டெஸ்ட்,)
மொத்தம் 3 சதங்கள். சராசரி 80.25 ரன்கள்.
1977 - 78 ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டது. பெரும்பாலான சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் தொடரில் பங்கு பெற்றதால் , ஆஸ்திரேலிய அணியை வழி நடத்தும் பொறுப்பு ஓய்வு பெற்று இருந்த பாப் சிம்ப்சனிடம் அளிக்கப்பட்டது. .அப்பொழுது அவரது வயது 40 க்கும் மேல்.
இவரது அனுபவத்தின் துணை கொண்டு , நின்று ஆடி இரண்டாம் டெஸ்ட் பெர்த்தில் அவர்கள் அணி வெற்றி பெற உதவினார். இதில் அவரது ஸ்கோர் 176 ரன்கள். எதிர் கொண்ட பந்துக்கள் 355 ( 17x4 ).
5 வது அடிலேய்ட் டெஸ்டிலும் வெற்றி பெற சிம்ப்சன் பேட்டிங் உதவியது. ரன்கள் 100 பந்துக்கள் 200 ( 6x4 ).
அனுபவ வீரர் பாப் சிம்ப்சன் அவரது அபார பேட்டிங் மற்றும்
கேப்டனாக சிறந்த வழி நடத்தும் திறமையால் தொடரை வெற்றி பெற செய்தார்.
பலவகை சூழ்நிலைகளில் , பல்வேறு மைதானங்களில், பல கட்டங்களில் , பலவகையான அணிகளுக்கு எதிராக ஆடி பெற்ற அனுபவங்களை பயனுள்ளதாக உபயோகிக்க.அனுபவ வீரர்கள் அறிவார்கள்.அனுபவமும் கை கொடுக்கும் வெற்றியை பதிவு செய்ய.
வாசுதேவன், பெங்களூரு