பகல் இரவு டெஸ்டில் ஸ்ரேயாஸ் சாதனை.. இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா.. இலங்கைக்கு கஷ்டம் தான்
பெங்களுரு: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 450 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் இலங்கை அணி 109 ரன்களில் சுருண்டது.
143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரராக ரோகித் சர்மா, மாயங் அகர்வால் களமிறங்கினர்.

ரோகித் மிஸ்
மாயங் அகர்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா இம்முறை பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 46 ரன்களில் வெளியேறினார். இளம் வீரர் விஹாரியும் 79 பந்துகளை எதிர்கொண்டு 35 ரன்கள் சேர்த்தார்.

ரிஷப் பண்ட் சாதனை
முன்னாள் கேப்டன் விராட் கோலியும் 13 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து தடுமாறிய இந்திய அணியை ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் விளாசி, அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முதல் இந்தியர்
ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் , முதல் இன்னிங்ஸ் விளையாடியது போல், இம்முறையும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 87 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களை சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

447 ரன்கள் இலக்கு
இறுதியில் ஜடேஜா 22 ரன்கள், முகமது ஷமி 16 ரன்கள் அடிக்க இந்திய அணி 303 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்த நிலையில் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 447 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் திரிமானே டக் அவுட் ஆனார்.ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications