Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: ஒரேயொரு வீரரால் மாறிய ஆட்டம்.. 21 வயது வீரரை வைத்து இந்தியாவுக்கு ஆட்டம் காட்டிய இலங்கை!

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு 1 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. அப்போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா 2 பந்துகளில் சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி 200 ரன்களை எட்டவே வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்ட நிலையில், 21 வயதாகும் இளம் வீரரான வெல்லாலகே இந்திய பவுலர்களை எளிதாக சமாளித்து ரன்களை குவித்தார்.

IND vs SL Dunith Wellalage Shivam Dube


சிறப்பாக ஆடிய வெல்லாலகே 65 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாகவே இலங்கை அணியால் கவுரவமான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறிய நிலையில், மீண்டும் வெல்லாலகே பந்தை கையில் எடுத்தார்.

அவர் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே சுப்மன் கில் 16 ரன்களிலும், ரோஹித் சர்மாவை 58 ரன்களிலும் வீழ்த்தி இலங்கை அணி பக்கம் ஆட்டத்தை திருப்பினார். தொடர்ந்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் வெல்லாலகே பவுலிங்கை சிறிது தயக்கத்துடனே எதிர்கொண்டனர். சிறப்பாக பவுலிங் செய்த வெல்லாலகே 9 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உட்பட 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் 21 வயதாகும் வெல்லாலகே இந்திய அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த ஆண்டில் இந்திய அணி ஆடிய முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்று முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கி விளையாடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது.

டி20 தொடரில் கடைசி போட்டியை டிரா செய்து இந்திய அணி சூப்பர் ஓவர் மூலமாக வென்றது. அந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் பவுலிங் செய்து போட்டியை இந்தியா பக்கம் திருப்பினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை டிரா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 2, 2024, 22:29 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+