For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா படுதோல்வி.. கோச்சிங் பிரமாதமா தொடங்கிருக்கீங்க.. கவுதம் கம்பீரை பொளக்கும் வெறித்தன மீம்ஸ்!

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணியையும், இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீரையும் கிண்டல் செய்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

28 ஆண்டுகளுக்கு பின் இந்தியா உலகக்கோப்பை வென்றதற்கான காரணத்தை எடுத்து கொள்ள வகையில் கம்பீர் பல்வேறு தருணங்களில் செயல்பட்டுள்ளார். ஆனால் இறுதியாக பயிற்சியாளராக வந்த பின் 27 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்த பெருமை கம்பீருக்கு கிடைத்துவிட்டதாக நாடகத்தில் வரும் சிறுவனின் முகத்தை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் ரகிட ரகிட ரகிட ரகம்.

IND vs SL Memes Gautam Gambhir

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தில் பக்ஸ் கதாபாத்திரம் அவுட்டான பின், விஜய் சேதுபதியை பார்த்து "நீ யார் டீம்" என்று நக்கலுடன் கேட்பார். அதனை அப்படியே பக்ஸ் கதாபாத்திரத்தை இந்திய ரசிகர்களாகவும், விஜய் சேதுபதியை விராட் கோலியாகவும் மாற்றி, "ஆமா.. இந்த ஒருநாள் தொடரில் என்ன பண்ணீங்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

IND vs SL Memes Gautam Gambhir

நேற்றைய ஆட்டத்தில் 49வது ஓவரின் கடைசி பந்தில் தீக்சனா பெரிய ஷாட் ஆட முயன்று க்ரீஸில் இருந்து வெளியில் நின்றார். அப்போது பந்தை பிடித்த ரிஷப் பண்ட், ஸ்டம்பிங் செய்யாமல் நீண்ட நேரம் காத்திருந்து கடைசி நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். தீர்ப்பு 3வது நடுவரிடம் செல்ல, அது நாட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் ரோஹித் சர்மா டென்ஷனானார். இதில் ரோஹித் சர்மாவை வடிவேலுவாகவும், சிங்கமுத்துவை ரிஷப் பண்ட்-ஆகவும் மாற்றி, "வேகமா ஸ்டம்பிங் பண்ணா போலீஸ் பிடிச்சிருமா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எனக்குனே வருவீங்களாடா மொமெண்ட்.

IND vs SL Memes Gautam Gambhir

விஸ்வாசம் படத்தில் அஜித் குமாரை பார்த்து ரோபோ ஷங்கர், "10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்த பங்காளி நீ" என்று பில்டப்புடன் சொல்லுவார். அதனை அப்படியே அஜித் குமாரை விராட் கோலியாக மாற்றி, ரசிகர்களை ரோபோ ஷங்கராக மாற்றி, "போன வருஷம் வரைக்கும் எப்படி இருந்த விராட் கோலி" என்று அவரின் மோசமான ரெக்கார்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் எப்படி இருந்த நா.. இப்படி ஆயிட்டேன் மொமெண்ட்.

IND vs SL Memes Gautam Gambhir

"செக்க சிவந்த வானம்" படத்தில் சிலம்பரசனை போனில் அழைக்கும் ஜோதிகா, "நல்லா இருப்பியா தம்பி நீ.." என்று கண்ணீருடன் அழுதுகொண்டே கேட்பார். இதில் சிலம்பரசனை துனித் வெல்லாலகே-வாகவும், ஜோதியாவை இந்திய ரசிகராகவும் மாற்றி, நல்லா இருப்பியா தம்பி என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இந்திய ரசிகர்கள் மனக்குமுறல்.

IND vs SL Memes Gautam Gambhir
Story first published: Thursday, August 8, 2024, 13:25 [IST]
Other articles published on Aug 8, 2024
English summary
IND vs SL: Fantastic memes from social media after india lost by 110 runs against srilanka in the 3rd odi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+