Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூர்யா முரளிதரன், ரிங்கு கும்ப்ளே, ரியான் வார்னே.. இதுதான் தலைவன் கம்பீர் ஸ்டைல்.. தெறிக்கும் மீம்ஸ்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலமாக த்ரில் வெற்றியை பெற்றது. அதில் கடைசி 2 ஓவர்களை ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் வீசி, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றதை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து வரும் மீம்ஸை பார்க்கலாம்.

"யாரடி நீ மோகினி" படத்தில் ஆஸ்திரேலியா செல்லும் தனுஷ், தனது தந்தையான ரகுவரனை பார்த்து "ஆஸ்திரேலியா" ஸ்பெல்லிங் தெரியுமா என்று நக்கல் செய்வார். அதுபோல் தனுஷை சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங்காகவும், ரகுவரனை பும்ராவாகவும் மாற்றி மீம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ரிங்கு, சூர்யா இணைந்து பும்ராவை பார்த்து, "டெத் பவுலிங்.. ஸ்பெல்லிங் தெரியுமா" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அலப்பறை ரகம்.

ind vs sl memes Suryakumar Yadav

சர்வதேச கிரிக்கெட்டில் ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ் இருவரும் ஒரு ஓவர் கூட பவுலிங் செய்ததில்லை. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இருவரும் பிரஷர் நிறைந்த கடைசி 2 ஓவர்களை வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ind vs sl memes Suryakumar Yadav

இதனை மாற்றி சூர்யகுமார் முரளிதரன், ரிங்கு கும்ப்ளே, ரியான் வார்னே என்று மூவருக்கும் பெயரை மாற்றி, அதற்கு காரணமான ஆர்டிஸ்ட் கவுதம் கம்பீர் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல் ரகம்.

ind vs sl memes Suryakumar Yadav

தில்லாலங்கடி படத்தில் தமன்னாவை காதலிப்பதற்காக உடற்பயிற்சி செய்யும் வடிவேலுவை பார்த்து ஜெயம் ரவி காமெடி பீஸ் என்று ஜாலியாக கிண்டல் செய்வார். அதனை மாற்றி, இந்திய அணியை ஹசரங்கா மற்றும் பயிற்சியாளர் ஜெயசூர்யா ஆகியோரையும், இந்திய அணியையும் ஒப்பிட்டு காமெடி பீஸ் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ind vs sl memes Suryakumar Yadav

சிங்கம் படத்தில் வில்லன் பிரகாஷ் ராஜின் ஆட்களை கைது செய்து சூர்யா பதிலடி கொடுத்தார். அதன்பின் பிரகாஷ் ராஜிடம் நேரடியாக சென்று, "எதிர்பார்க்கலைல" மாஸ் வசனத்தை பேசுவார்.

ind vs sl memes Suryakumar Yadav

அதனை அப்படியே கடைசி 2 ஓவர்களை வீச ரிங்கு சிங்கும், சூர்யகுமார் யாதவும் வருவார்கள் என்று "எதிர்பார்க்கலைல", ஆட்டம் சூப்பர் ஓவருக்கு செல்லும் என எதிர்பார்க்கலைல என்று இலங்கை அணியை கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

Story first published: Wednesday, July 31, 2024, 13:49 [IST]
Other articles published on Jul 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+