Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பிக்கை இருக்கு.. பயிற்சியாளராக மிரட்டுவாய்.. சிரிப்பை மட்டும் விட்டுவிடாதே.. கண்கலங்கிய கம்பீர்!

மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் புதிய பயணத்தை தொடங்கவுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலமாக கம்பீர் தனது பணியை தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சாதித்திருப்பதால், கம்பீர் மீது ரசிகர்களும் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், புதிய பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உலகிலேயே மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சவால்கள் நிறைந்த பொறுப்புக்கு உங்களை வரவேற்கிறேன். நீங்கள் இருந்த இடத்தில் 3 வாரங்களுக்கு முன் நான் இருந்திருக்கிறேன். அப்போது இந்திய வீரர்களுடன் கிடைத்த அனுபவங்களை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

ind vs sl Gautam Gambhir Shubman Gill

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கிடைத்த வெற்றியாக இருக்கட்டும், மும்பையில் இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பாக இருக்கட்டும்.. ஒவ்வொரு நிமிடங்களும் பொக்கிஷம் போல் நினைவில் இருக்கும். எனக்கு கிடைத்த பயிற்சியாளர் வாய்ப்பு, தற்போது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவத்தை மகிழ்ச்சியுடன் எடுத்து செல்லவும். இந்திய கிரிக்கெட் மீதான உங்களின் ஆர்வமும் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் போது நாம் மற்றவர்களை விடவும் கொஞ்சம் கூடுதல் அறிவுகூர்மையுடன் செயல்பட வேண்டும். இந்திய அணிக்காக நாம் இணைந்து விளையாடி இருக்கிறோம். சக பேட்டிங் பார்ட்னராகவும், சக ஃபீல்டராகவும் உங்களின் அர்ப்பணிப்பை நேரில் கண்டிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் வெற்றிக்காக நீங்கள் தீவிரமாக முயற்சிப்பதை எதிரில் நின்று பார்த்திருக்கிறேன்.

அது இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலும் தொடரும் என்று அறிவேன். அதேபோல் கடினமான அழுத்தமான சூழல்களில் கொஞ்சம் மூச்சுவிட்டு முகத்தில் சிரிப்பை வெளிப்படுத்துங்கள். அதனை எப்போதும் மாற்றாதீர்கள் என்று வாழ்த்தியுள்ளார். இதனால் எமோஷனலான கம்பீர், இந்த வாழ்த்திற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இந்திய அணிக்காக தன்னலமன்றி விளையாடிய வீரர் ராகுல் டிராவிட்.

நான் கிரிக்கெட் வீரராக கனவை சுமந்த போது, ராகுல் டிராவிட்டை பார்த்து ஊக்கமடைந்திருக்கிறேன். இந்திய அணிக்காக அனைத்து விஷயங்களையும், விளையாடும் போதும், விளையாடிய பின்னரும் ராகுல் டிராவிட் செய்திருக்கிறார். ஏராளமான இளம் வீரர்களை தயார்ப்படுத்தி இருக்கிறார். எனது பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ராகுல் டிராவிட்டிடம் இருந்து வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 27, 2024, 17:17 [IST]
Other articles published on Jul 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+