For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி கோலி, ரோகித் வெளிநாட்டில் சுற்றுலா செல்ல முடியாது.. கம்பீர் வைத்த செக்.. மீறினால் நடவடிக்கை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைத்தால் வெளிநாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். இதற்காக சில தொடர்களில் பங்கேற்காமல் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று பிசிசிஐயிடம் சில வீரர்கள் கேட்பது உண்டு.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் ஒரு பெரிய ஆப்பு ஒன்றை சீனியர் வீரர்களுக்கு வைத்திருக்கிறார். அதன்படி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தாங்கள் விளையாட போவதில்லை என விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா பும்ரா போன்ற வீரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

ind vs sl india sri lanka

இதற்கு சீனியர்கள் சொல்லும் காரணம், இந்தியா வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதால் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் கம்பீர் இந்த பாயிண்டையே அவர்களுக்கு எதிராக திருப்பி விட்டார். தற்போது பிசிசிஐயால் நடத்தப்படும் துலீப் கோப்பை என்ற உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாட வேண்டும் என்று கம்பீர் பி சி சி ஐ க்கு கூறியிருக்கிறார்.

ஏற்கனவே பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் வீரர்கள் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து ரஞ்சிப் போட்டிகளில் பங்கேற்காத ஸ்ரேயாஸ், இசான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி பும்ரா போன்ற வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் பங்கேற்று டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும் என கம்பீர் பிசிசிஐ யிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனால் மூன்று ஸ்டார் வீரர்களும் துலீப் கோப்பை தொடரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை இந்த தொடரில் பங்கேற்க மாட்டேன் என சீனியர் வீரர்கள் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் ஸ்டார் வீரர்கள் கூட தங்கள் நாட்டின் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் ஐபிஎல் தொடரை தவிர வேறு எந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சீனியர் வீரர்கள் பங்கேற்பதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கம்பீர் காய் நகர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 16, 2024, 16:23 [IST]
Other articles published on Jul 16, 2024
English summary
Ind vs SL - Gautam Gambhir ask BCCI to call senior Platers like kohli and rohit to play in duleep trophy இனி கோலி, ரோகித் வெளிநாட்டில் சுற்றுலா செல்ல முடியாது.. கம்பீர் வைத்த செக்.. மீறினால் நடவடிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+