Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹிட்லர் போல் நடந்து கொள்வாரா கம்பீர்? கோச்சிங் ஸ்டைல் எப்படி? இந்த 3 வார்த்தைதான் முக்கியம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்றுள்ள நிலையில் தற்போது முதல் தொடராக இலங்கை சென்று மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இருநம்பிக்கை! இந்த தொடருக்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்த பேட்டியின் மூலம் கம்பீரின் கோச்சிங் ஸ்டைல் எவ்வாறு இருக்கப் போகிறது என்று ஒரு தெளிவு ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.
கம்பீர் ஒரு ஆக்ரோஷமான வீரர் சீனியர் வீரர்களுக்கு கம்பீர் வருவது பிடிக்காது போன்ற தகவல் எல்லாம் வெளியாகி வந்தது.

ind vs sl india squad cricket vs Gambhir

ஆனால் கம்பீரின் பேட்டி இதற்கு நேர்மாறான கருத்தை உருவாக்கியிருக்கிறது. கம்பீரின் பேட்டியில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று தான். ஏதோ கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் இந்திய அணியை மீட்டு வெற்றியடைய வைப்பேன் என்றெல்லாம் அவர் பேசவே இல்லை. மாறாக இந்திய அணி ஒரு வெற்றிகரமான அணியாக இருக்கிறது.

அதில் நான் பயணிக்க போகிறேன் என்ற வார்த்தை தான் பயன்படுத்தினார். மேலும் கோச்சிங் ஸ்டைல் எவ்வாறு இருக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் இங்கு கவனிக்க வேண்டியது. அதில் இது மிகவும் சிம்பிளான விஷயம். வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்க வேண்டியது அவசியம். அதைத்தான் நான் நம்புகிறேன்.

நான் தலைமை பயிற்சியாளர். நீ ஒரு வீரர் என்ற ஒரு உறவு முறையை நான் நிச்சயம் கடைபிடிக்க மாட்டேன். வீரருக்கும் ஒரு பயிற்சியாளருக்கும் நம்பிக்கையின் மீதுதான் ஒரு நல்ல உறவு அமைய முடியும். நிச்சயமாக அனைத்து வீரர்களுக்கும் என்னுடைய ஆதரவு இருக்கும். இந்தியா ஒரு வெற்றிகரமான அணியாக இருப்பதால் நான் பெரிய அளவில் எந்த விஷயத்தையும் மாற்ற தேவையில்லை.

இதைப் போன்று ட்ரெஸ்ஸிங் ரூம் சந்தோஷமாக இருந்தாலே நிச்சயம் அது வெற்றி பெற வழிவகுக்கும். கிரிக்கெட் என்பது ஒரு அணியின் விளையாட்டு எங்களுடைய பயிற்சியாளர் குழு வீரர்களின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் என்று கம்பீர் கூறினார். மேலும் கம்பீர் இந்த மூன்று முக்கிய வார்த்தைகளை தான் திரும்பத் திரும்ப கூறினார்.அது,நம்பிக்கை! சுதந்திரம்!வெற்றி! என்ற வார்த்தைகள் தான் எனவே இந்த மூன்றும் தான் கம்பீரின் கோச்சிங் ஸ்டைலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 23, 2024, 8:30 [IST]
Other articles published on Jul 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+