மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கௌதம் கம்பீர் மெண்டராக (வழிகாட்டி) இருந்த போது இரண்டு வீரர்கள் அவருக்கு செல்ல பிள்ளை போல் மாறிவிட்டார்கள். இதனால் தமக்கு பிடித்த இரண்டு வீரர்களுக்கு யாருக்கு கௌரவத்தை அளித்து திருப்திப்படுத்த போகிறோம் என்ற குழப்பத்தில் கம்பீர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்.

இதன் காரணமாக டி20 அணியின் கேப்டன் யார்? ஒருநாள் போட்டியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா வரவில்லை என்றால் கேப்டன் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
பயிற்சியாளராக கம்பீர் லக்னோ அணியில் மெண்டராக இருந்த நிலையில் அவருக்கு நெருங்கிய வீரர்கள் என்றால் அது கேஎல் ராகுல் தான். லக்னோ அணிக்காக கம்பீர இருந்தபோது கே எல் ராகுல் அவருடைய உற்ற நண்பனாக இருந்தார். இதேபோன்று கொல்கத்தா அணிக்கு மெண்டராக மாறிய போது கம்பீரின் நிழலாகவே ஸ்ரேயாஸ் ஐயர் விளங்கி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து கம்பீரின் தாகத்தை தீர்த்தார்.
இதனால் இரண்டு பேரையுமே தமது இரண்டு கண்களாக கம்பீர பாவித்து வரும் நிலையில், யாருக்கு இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் என்ற கௌரவத்தை வழங்க போகிறோம் என்ற யோசனையில் இருக்கின்றார். ரோகித் சர்மா இல்லாதபோது எல்லாம் கே எல் ராகுல் தான் அணியை வழிநடத்தி இருக்கிறார்.இதனால் ராகுலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும் வீரர்கள் ஒப்பந்தத்திற்கு இல்லாத அணியில் சேர்ப்பதே கடினம் என்பதால் அவரை கேப்டனாக நியமித்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக கேஎல் ராகுலுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு துணை கேப்டன் என்ற அந்தஸ்தை வழங்க கம்பீர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமக்கு வேண்டிய வீரர்களை வைத்து கம்பீர் எடுக்கும் முடிவுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.