IND vs SL: இந்த வீரரை தொடர்ந்து 2 டெஸ்டிலும் ஆட வைக்க வேண்டும்.. கம்பீருக்கு வந்த கோரிக்கை
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக சாய் சுதர்சன் விளையாடவில்லை என்றால், அவரது 3-வது வரிசையில் தேவ்தத் படிக்கலை களம் இறக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா வலியுறுத்தியுள்ளார்.
சாய் சுதர்சன் தற்போது கால் விரல் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், இன்னும் இந்திய அணியுடன் இணையவில்லை. முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், இரு டெஸ்ட் போட்டிகளிலும் 3-வது வரிசையில் ஒரே பேட்டரை விளையாட வைக்க வேண்டும் என்று தாஸ்குப்தா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் 3-வது வரிசை வீரராக சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். அண்மையில் இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக காலேவில் நடைபெற்ற இரண்டு சிவப்பு பந்து போட்டிகளிலும் அவர் சதம் அடித்து சிறந்த ஃபார்மில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் சுதர்சன் இல்லாத பட்சத்தில் இந்தியாவின் 3-வது வரிசை குழப்பம் குறித்து தீப் தாஸ்குப்தா தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், "இரண்டாவது போட்டிக்கு சாய் சுதர்சன் தகுதியடைந்தாலும், படிக்கல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கையை அவருக்கு வழங்குவது முக்கியம் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் இது இரண்டு போட்டிகள் கொண்ட சிறிய தொடர் என்பதால், படிக்கல் முதல் போட்டியில் விளையாடினால், இரண்டாவது போட்டியிலும் அவரே விளையாட வேண்டும்.
சாய் சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்புகளை வழங்குவது நியாயமானது, அத்தகைய பாதுகாப்பு வீரர்களுக்கு தேவை. அதேபோல் படிக்கலுக்கும் அந்தப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். முதல் போட்டியில் சாய் சுதர்சன் விளையாடும் அளவிற்கு தகுதி பெறுவார் போல் தெரிகிறது. ஆனால் ஒருவேளை அவர் விளையாடாமல், படிக்கல் 3-வது வரிசையில் களம் இறங்கினால், இது இரண்டு போட்டிகள் கொண்ட தொடர் என்பதை நிர்வாகம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சாய் குணமடைந்தாலும், அவரை மீண்டும் அணியில் சேர்க்கப் போகிறீர்களா அல்லது இரண்டாவது போட்டியிலும் படிக்கல் தான் விளையாடுவார் என்று அவரிடம் முன்கூட்டியே உறுதியளிக்கப் போகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
படிக்கல் கடைசியாக 2024 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் பெர்த் டெஸ்டில் இந்தியாவிற்காக விளையாடினார். மார்ச் 2024 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போதிலும், அவர் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications

" width="200" height="113">