IND vs SL: மனைவியால் கேப்டன் பதவியை இழந்த ஹர்திக் பாண்டியா.. பிசிசிஐ முடிவுக்கு இதுதான் காரணமா?
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு துணை கேப்டன் பதவி கூட அளிக்கப்படவில்லை. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தார். ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு மாறாக சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னணியில் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் ஹர்திக் பாண்டியா வேண்டாம் என முடிவு எடுக்க என்ன காரணம்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் அவரது மனைவி குறித்த விவகாரம். ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கும் வரை அந்த அறிவிப்பு பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அவர்களது பிரிவு குறித்து பிசிசிஐ அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டாம் என பிசிசிஐ மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா கடந்த ஆறு மாதங்களாகவே மனவேதனையில் இருந்து வருகிறார். முதலில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை. அதனால், ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு இல்லை. அடுத்த அவரது தனிப்பட்ட வாழ்விலும் மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் சோகத்தில் இருந்தார். தற்போது விவாகரத்தும் பெற்று இருக்கிறார்.
தற்போது ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்வு, அவர் இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை. இதை உணர்ந்து கம்பீர் மற்றும் பிசிசிஐ தேர்வுக் குழு இணைந்து அவருக்கு அதிக சுமை அளிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்வு அவரது கிரிக்கெட் வாழ்வை மோசமாக பாதித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications