Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஹர்திக்கிற்கு ஆப்பு.. டிசம்பர் மாதம் கிளைமாக்ஸ்.. என்ன நடக்கிறது?

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இப்போது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சரிவுகளைக் கண்டாலும், டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரசிகர்களின் ஹீரோவாக விளங்குகிறார்.

இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பிடித்திருக்கிறார். எனினும் கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இந்த பதவி வழங்கப்படவில்லை.

ind vs sl india squad cricket

இது ஹர்திக் பாண்டியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று சஞ்சய் பங்கர் குற்றச்சாட்டி இருக்கிறார். இந்த சூழலில் தனிப்பட்ட காரணங்களால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று ஹர்திக் பாண்டியா ஒரு நாள் தொடரில் தம்மை பரிசீலிக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.

எனினும் ஹர்திக் பாண்டியா விஷயத்தில் பிசிசிஐ ஒரு முடிவு எடுத்திருக்கிறது. அதாவது ஹர்திக் பாண்டியா 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்த போது பத்து ஓவர்கள் வீச முடியாமல் திடீரென்று காயம் அடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது.

எனினும் ஆறு மாதம் கடும் பயிற்சிக்கு பிறகு ஐபிஎல் தொடர், t20 உலக கோப்பை என ஹர்திக் பாண்டியா விளையாடினாலும் அதில் வெறும் நான்கு ஓவர்தான் வீச வேண்டும். ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டு பத்து ஓவர்கள் மற்றும் 50 ஓவர் பில்டிங் பேட்டிங் என பணிச்சுமை அதிகம் என்பதால் ஹர்திக் பாண்டியாவால் அதனை தாங்க முடியுமா என்று சந்தேகத்தில் பிசிசிஐ இருக்கிறது.

இதனால் ஹர்திக் பாண்டியா வரும் டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று அதில் அவருடைய உடல் தகுதியையும் திறனையும் நிரூபித்தால் மட்டுமே ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு அவர் பரிசளிக்கப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவரை ஹர்திக் பாண்டியா வெறும் டி20 அணியில் மட்டும்தான் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. காயம் அடிக்கடி அடைகிறார் என்ற ஒரே காரணத்திற்காக தான் டி20 அணியிலும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 22, 2024, 8:30 [IST]
Other articles published on Jul 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+