Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பையன் கிட்ட ஜெட் விமானமா? சீனியர் கிரிக்கெட் வீரர்களை வாயை பிளக்க வைத்த இந்திய வீரர்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகம் சம்பாதிக்கும் விராட் கோலி, தோனி, சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் தனி ஜெட் விமானம் வைத்துள்ளனர். ஆனால், யாரும் எதிர்பாராத மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரும் தனக்கென தனி ஜெட் விமானத்தை வைத்துள்ளார். அந்த வீரர் ஹர்திக் பாண்டியா.

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பல கோடி மதிப்புள்ள கார்களை வாங்குவார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான கோடி சம்பாதிக்கும் வீரர்கள் ஜெட் விமானத்தை வாங்கி வைத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே ஆயிரக்கணக்கான கோடிகளில் சம்பாதித்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகிய மூவரும் தனி ஜெட் விமானம் வைத்துள்ளனர். இவர்கள் மூவருக்கும் விளம்பரம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் கிடைத்து வருகிறது.

IND vs SL india Sri lanka

1983 உலகக் கோப்பை வென்று கொடுத்த கபில் தேவ் தனக்கென தனி ஜெட் விமானம் வைத்துள்ளார். அவர் பல்வேறு வியாபாரங்கள் செய்து வருகிறார். அதில் அதிக பணம் சம்பாதித்து தனி ஜெட் விமானத்தை வாங்கி உள்ளார். இந்த நான்கு வீரர்களை தவிர்த்துப் பார்த்தால், இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஹர்திக் பாண்டியா மட்டுமே தனி ஜெட் விமானம் வைத்துள்ளார்.

அதனாலயே அவரைப் பார்த்து மற்ற இந்திய வீரர்களுக்கு சற்று பொறாமை அதிகம் என்ற பேச்சு உள்ளது. இது எப்படி சாத்தியம்? ஹர்திக் பாண்டியா எப்படி தனி ஜெட் விமானம் வாங்கினார்? தற்போது இந்தியாவில் விளம்பரத்திற்கு அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் தோனி இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார்.

இவர்கள் மூவருக்கும் அடுத்து நான்காவது இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். சமூக வலை தளத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் சமூக வலை தளத்தில் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை பகிர்ந்தால் அதற்கு சில கோடிகள் அவருக்கு சம்பளமாக கிடைக்கும்.

அதைத் தவிர்த்து அவர் பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவர் ஒரு வீரராக சம்பாதிப்பது மட்டுமின்றி பல்வேறு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். அதற்கு விராட் கோலிக்கு இணையாக அவருக்கும் சம்பளம் கிடைக்கும். விளம்பர வருவாயில் விராட் கோலி, தோனி சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

அவர் பல நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டுள்ளார். அதனால் அவரும் தனி ஜெட் விமானம் வைத்துள்ளார். இதில் தனி ஜெட் விமானாம் வைத்துள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்களில், ஹர்திக் பாண்டியா உடைய விமானத்தின் விலை மிக, மிக குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ள ஜெட் விமானத்தின் மதிப்பு 250 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இத ஐவரில் சச்சினுடைய விமானமே மிக அதிக விலை கொண்ட ஜெட் விமானம் ஆகும். விராட் கோலி வைத்துள்ள ஜெட் விமானத்தின் விலை 120 கோடி ரூபாய் ஆகும். தோனி மற்றும் கபில் தேவ் வைத்துள்ள ஜெட் விமானத்தின் விலை 110 கோடி என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவின் ஜெட் விமானத்தின் விலை 40 கோடி என கூறப்படுகிறது.

Story first published: Tuesday, July 23, 2024, 23:30 [IST]
Other articles published on Jul 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+