Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் ரொம்ப க்யூட்.. டிசம்பரில் கிரிக்கெட் வீரருடன் திருமணமா? சீக்ரெட்டை உடைத்த நடிகை!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், 3 வடிவங்களுக்குமான வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில், ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். கேப்டனாக இவர் மீது சில விமர்சனங்கள் வந்தாலும், ஜிம்பாப்வே டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றார்.

விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் ரன் மெஷினாக சுப்மன் கில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், இப்போதே ரசிகர்கள் அவரை பிரின்ஸ் என்று அழைக்க தொடங்கியுள்ளனர். எவ்வளவு தூரம் கிரிக்கெட்டில் சுப்மன் கில் உயர்ந்துள்ளாரோ, அதே அளவிற்கு பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கருடன் காதல் உறவில் இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.

ind vs sl Shubman Gill

இன்ஸ்டாகிராமில் இருவரும் பதிவிடும் புகைப்படங்கள், சில பொது இடங்களில் இருவரும் சந்தித்த நிகழ்வுகள் காதலை உறுதிப்படுத்தின. இருந்தாலும் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இந்தி தொலைக்காட்சி நடிகை ரித்திமா பண்டிட்-ஐ டிசம்பர் மாதம் சுப்மன் கில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக இந்தி தொலைக்காட்சி நடிகை ரித்திமா பண்டிட் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சுப்மன் கில்லும் நானும் எந்த உறவிலும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவரை நான் சந்தித்ததே கிடையாது. அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். ஒருவேளை நாங்கள் சந்தித்தால், இந்த விவகாரம் குறித்து சிரிப்போம் என்று நினைக்கிறேன். அதேபோல் சுப்மன் கில் ரொம்பவே க்யூட்.. ஆனால் எங்களுக்குள் எந்த உறவும் இல்லை.

இது வெறும் கற்பனை கதை தான். யாரோ எழுதியதால் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. காலையில் இருந்து எனக்கு சில வாழ்த்து செய்திகள் கூட வரத் தொடங்கிவிட்டன. இந்த வதந்தியை மறுத்தி சலிப்பு ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே சோசியல் மீடியாவிலும் பதிவிடுகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே உள்ளேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Story first published: Thursday, July 18, 2024, 16:01 [IST]
Other articles published on Jul 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+