For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டனாக இருக்க விரும்பவில்லை.. தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.. சூர்யகுமார் யாதவ் பேட்டி!

பாலக்கலே: இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி வெற்றிக்கு அருகில் வந்த நிலையில், கடைசி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

அப்போது திடீரென ரிங்கு சிங் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த ரிங்கு சிங், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து கடைசி ஓவரை வீச சிராஜ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்தை கையில் எடுத்தார். இதனால் இந்திய ரசிகர்களும் ஆச்சரியமடைந்தனர்.

ind vs sl Suryakumar Yadav Gautam gambhir

ஆனால் அந்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் நடந்த சூப்பர் ஓவரில் இலங்கை 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்திய அணி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டல் வெற்றியை பெற்றது. சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்த வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், கடைசி 2 ஓவரை காட்டிலும், 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது, ஒவ்வொரு வீரரும் நம்பிக்கையுடன் விளையாடினர். அதுதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிட்சில் 140 ரன்கள் தான் சராசரி ஸ்கோராக உள்ளது. இதனால் அந்த ஸ்கோரை நோக்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தோம்.

இதுபோன்ற போட்டிகளை ஏராளமான முறை நான் பார்த்திருக்கிறேன். அப்போது சக வீரர்களிடம் நம்பிக்கையுடன் விளையாடினால், நிச்சயம் வெல்வோம் என்றே கூறினே. இந்த அணியின் பெஞ்ச் வலிமை மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு வீரரும் ஏராளமான திறமையுடன் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அது எனது பணியையும் குறைத்துவிடுகிறது.

சக வீரருக்கு ஆதரவாக அனைவரும் நிற்பதை பார்க்க அற்புதமாக உள்ளது. அதனால் நான் பேட்டிங் செய்ய செல்ல போகும் போது கொஞ்சம் அழுத்தத்தை உணர்கிறேன். மேலும், எப்போது கேப்டனாக விரும்பியவில்லை. ஒரு தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, July 31, 2024, 7:14 [IST]
Other articles published on Jul 31, 2024
English summary
IND vs SL: I don't want to be Captain, I want to be a Leader says India Captain Suryakumar Yadav after the win against Srilanka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+