பல்லாக்கலே : இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 பந்துகளாக பவுண்டரி அடிக்காமல் தடுமாறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதனால் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் கடுப்பாகி டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்தார்.
மூன்று டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே வென்றது. இந்த சூழலில் சம்பிரதாய ஆட்டமாக இன்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன் அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பாளர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெய்ஸ்வால் இரண்டு பவுண்டரிகளை அடித்து விட்டு 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். மேலும் இந்திய அணி 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூரியகுமார் யாதவும் 8 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி சைலன்ட் மோடுக்கு சென்று விட்டது. இலங்கை அணி பெரிய அளவில் சூப்பராக எல்லாம் பந்து வீசவில்லை. ஆனால் விக்கெட்டுகள் சரிந்து விடுமோ என்ற பயத்திலே இந்திய அணி வீரர்கள் விளையாடினர். குறிப்பாக சிஎஸ்கே ரத்தம் சிவம் துபே களம் இறங்கி பேட்டிங் செய்ய தடுமாறினார்.
அவர் அடித்த பந்துகள் ஒன்று கூட பவுண்டரிக்கு செல்லவில்லை. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் ஒரு ஓவரில் குறைந்தபட்சம் இரண்டு பவுண்டரிகள் அடிக்க முயற்சி செய்வார்கள். ஆனால் சிவம் துபேவால் முடியவில்லை. சரி பேட்டிங்கில் ஆரம்பத்தில் இருந்து நின்று கொண்டிருக்கும் துணை கேப்டன் கில்லாவது பவுண்டரி அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் தமது விக்கெட்டை பறி கொடுத்து விடக்கூடாது என்ற சுயநலத்தில் களத்தில் நின்று கொண்டிருந்தார்.
இதன் அடுத்து சிவம் துபே ஆட்டமிழந்த நிலையில் களத்திற்கு வந்த ரியான் பராக் ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தார். இதன் மூலம் 33 பந்துகளுக்கு பிறகு இந்திய அணி முதல் பவுண்டரியை அடித்தது. சிவம் துபே மற்றும் கில் ஆகியோர் கவுண்டர் அட்டக் ஷாட்களை ஆடாமல் களத்தில் நின்றது கௌதம் கம்பீர் வெறுப்படைய செய்தது.