Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடரை தட்டித் தூக்கிய இந்தியா.. தெறிக்கவிட்ட ஷர்துல், சைனி.. இலங்கை அணி சரண்டர்!

புனே : இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் 2 - 0 என தொடரையும் வென்றது இந்திய அணி.

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே அபாரமாக அமைந்தது.

டி20 தொடர்

டி20 தொடர்

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி புனேவில் நடைபெற்றது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இந்தப் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், சிவம் துபே நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன், சாஹல், மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அபார துவக்கம்

அபார துவக்கம்

பேட்டிங்கில் துவக்க வீரர்கள் தவான் 52, ராகுல் 54 அபாரமாக ஆடி அரைசதம் கடந்தனர். சஞ்சு சாம்சன் 6, ஸ்ரேயாஸ் ஐயர் 4, வாஷிங்க்டன் சுந்தர் 0 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

இந்தியா ரன் குவிப்பு

இந்தியா ரன் குவிப்பு

மனிஷ் பாண்டே 31*, விராட் கோலி 26, ஷர்துல் தாக்குர் 22* கை கொடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்து அசத்தியது. இந்தியா 11வது ஓவர் முதல் தொடர்ந்து விக்கெட் இழந்தாலும் ரன் குவிப்பில் அசத்தியது.

இரண்டு பேட்ஸ்மேன்கள் அபாரம்

இரண்டு பேட்ஸ்மேன்கள் அபாரம்

அடுத்து சேஸிங் செய்த இலங்கை அணியில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே 10 ரன்களை தொட்டனர். அதே சமயம், சிறப்பாகவும் ரன் குவித்தனர். அவர்கள் ஏஞ்சலோ மாத்யூஸ் 31, டி சில்வா 57.

இலங்கை சரிவு

இலங்கை சரிவு

மற்ற இலங்கை பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அந்த அணி 15.5 ஓவர்களில் 123 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

பும்ரா 1, ஷர்துல் தாக்குர் 2, நவ்தீப் சைனி 3, வாஷிங்க்டன் சுந்தர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது.

விருதுகள் வென்ற நாயகர்கள்

விருதுகள் வென்ற நாயகர்கள்

ஆட்டநாயகன் விருதை பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ஷர்துல் தாக்குர் பெற்றார். நவ்தீப் சைனி இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்கள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.

Story first published: Friday, January 10, 2020, 23:07 [IST]
Other articles published on Jan 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+