மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து பல்வேறு வீரர்கள் தற்போது வெளிநாட்டில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கில் தலைமையில் இந்திய அணி இளம் வீரர்களையே களம் இறக்கியது.
இந்த சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டிருக்கிறார். கம்பீர் பொறுப்புக்கு வந்த பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் தொடராக இலங்கை அணி எதிராக மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் இருக்கின்றது.

இந்த போட்டிகள் இம்மாதம் ஜூலை 27ஆம் தேதி முதலில் டி20 போட்டியில் பிறகு ஒருநாள் போட்டியில் தொடங்குகிறது. இந்த சூழலில் ஒரு நாள் போட்டியில் ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பங்கேற்க மாட்டோம் என்று கூறிய நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி வெறும் ஆறு ஒருநாள் போட்டிகள் தான் களமிறங்குகிறது. இதில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளில் ஸ்டார் வீரர்கள் இல்லாதது ஏற்கனவே கம்பிருக்கு எரிச்சலை தந்திருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ராவும் இலங்கைத் தொடரிலிருந்து விலகி விடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் எந்த வீரர்களை களம் இறக்கி விளையாடுவது என்ற கோபத்தில் பிசிசிஐ இருக்கிறது. கம்பீரும் தமது முதல் தொடரின் பெரிய வீரர்களை வைத்து களம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால் ஒருவருக்கு பின் ஒருவராக இலங்கை தொடர்ந்து வெளியேறி இருப்பது கம்பீருக்கு எரிச்சலை கொடுத்திருக்கின்றது.
இதனால் கம்பீரின் வருகை ஸ்டார் வீரர்களுக்கு பிடிக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணி செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை சுமார் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக சீனியர் வீரர்கள் தற்போது ஓய்வு கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.