Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் ரன் அடிச்சாலும் ஒத்துக்க முடியாது.. சீனியர் இந்திய வீரரை சரமாரியாக விமர்சனம் செய்த ஸ்ரீகாந்த்!

Recommended Video

IND vs SL : Shikar Dhawan only got 2 matches to prove himself

சென்னை : இந்தியா - இலங்கை டி20 தொடரில் ரன் குவித்தால் கூட மூத்த வீரர் ஷிகர் தவானை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என கூறி இருக்கிறார் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

துவக்க வீரர் ஷிகர் தவான் பேட்டிங்கில் பார்ம் இன்றி தவித்து வருகிறார். ஏற்கனவே, டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழந்த நிலையில், டி20 அணியிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பார்ம் இழந்தார்

பார்ம் இழந்தார்

2019ஆம் ஆண்டு மிக மோசமாக காயங்களால் அவதிப்பட்டார் ஷிகர் தவான். இதற்கிடையே, அவரது பேட்டிங் பார்மும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஓரளவு ரன் குவித்தாலும், பேட்டிங்கில் அவர் திணறுவது வெளிப்படையாக தெரிகிறது.

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

ஸ்ட்ரைக் ரேட் குறைவு

குறிப்பாக, டி20 போட்டிகளில் அவரது தடுமாற்றத்தால், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அது இந்திய அணியை பல வழிகளில் பாதித்து வருகிறது.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை

இந்திய அணி தற்போது 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், கேப்டன் கோலி சரியான வீரர்களை இப்போதே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு

கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு

அந்த வகையில், மாற்று துவக்க வீரரான கேஎல் ராகுல், தவான் காயத்தில் இருந்த போது துவக்க வீரராக களமிறங்கி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ரன் குவித்தார். அவரை துவக்க வீரராக இந்திய அணி முடிவு செய்து விட்டது என்றே கூறப்படுகிறது.

ரோஹித்துக்கு ஓய்வு

ரோஹித்துக்கு ஓய்வு

எனினும், மூத்த வீரரான ஷிகர் தவானுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தவானுக்கு நிரூபிக்க வாய்ப்பு

தவானுக்கு நிரூபிக்க வாய்ப்பு

எனவே, இந்திய அணிக்கு தவான் - கேஎல் ராகுல் துவக்கம் அளிக்க உள்ளனர். இந்த தொடரில் தவான் துவக்க வீரராக முழு பார்மில் ரன்கள் குவித்தால் அவருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

போட்டி இல்லை

போட்டி இல்லை

ஆனால், முன்னாள் தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த், இந்திய அணியில் ராகுல் - தவான் இடையே எந்த போட்டியும் இல்லை. ராகுல் தான் இதில் ஒரே வெற்றியாளர் என அதிரடியாக கூறி இருக்கிறார்.

தேர்வு செய்ய மாட்டேன்

தேர்வு செய்ய மாட்டேன்

ஸ்ரீகாந்த் கூறுகையில், "இலங்கை அணிக்கு எதிரான ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. நான் இப்போது தேர்வுக் குழு தலைவராக இருந்தால் தவானை டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்ய மாட்டேன்" என்றார்.

ராகுல் தான் வெற்றியாளர்

ராகுல் தான் வெற்றியாளர்

மேலும், "தவானுக்கும், ராகுலுக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. இங்கே ஒரே ஒரு வெற்றியாளர் தான்" என ராகுலை குறிப்பிட்டார் ஸ்ரீகாந்த். தவான் குறித்து கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் ஸ்ரீகாந்த்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கடந்த வருடம் தவான் டி20 போட்டிகளில் 12 இன்னிங்க்ஸ்களில் 272 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக்ரேட் 110. அதே கடந்த ஆண்டில், ராகுல் 9 இன்னிங்க்ஸ்களில் 356 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 142 ஆகும். இந்த வித்தியாசம் தான் இந்த கடும் விமர்சனத்துக்கு காரணம்.

Story first published: Monday, January 6, 2020, 19:29 [IST]
Other articles published on Jan 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+