Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SL: 93 ஆண்டு சாதனையை சமன் செய்த மானவ் சுதர்.. முதல் இந்திய ஸ்பின்னர் என பெருமை

மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 93 ஆண்டுகள் பழமையான பந்துவீச்சு சாதனை ஒன்றைச் சமன் செய்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மானவ் சுதர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த அசாத்திய சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியப் பந்துவீச்சாளர் மற்றும் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ராஜஸ்தானைச் சேர்ந்த 24 வயதான இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், கடந்த 2026 ஜூன் 6 அன்று முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். அபோட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Manav suthar

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.இலங்கைக்கு எதிரான இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த சுதர், இரண்டாவது இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதற்கு முன்பு, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது நிசார் மட்டுமே தனது முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையைப் படைத்திருந்தார். இந்தியாவிற்காக மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிசார், 1932 ஜூன் 25 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸில் 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

அதைத் தொடர்ந்து, 1933 டிசம்பர் 15 அன்று மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தனது முதல் உள்நாட்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.கடந்த 94 ஆண்டுகளில், பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது முதல் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால், முகமது நிசார் மற்றும் மானவ் சுதர் ஆகிய இருவர் மட்டுமே தங்களது முதல் உள்நாட்டு மற்றும் முதல் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டிலுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தனித்துவமான சாதனையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலில் மானவ் சுதர் இணைந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 6 விக்கெட்டுகளைப் வீழ்த்திய மூன்றாவது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை இந்த ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் பெற்றுள்ளார்.

Story first published: Thursday, August 20, 2026, 7:00 [IST]
Other articles published on Aug 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+