For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியுடன் விளையாடியது கடவுள் தந்த பரிசு.. சிஎஸ்கேவால் தான் வாய்ப்பு வருகிறது.. பதிரானா நெகிழ்ச்சி

கொழும்பு : சிஎஸ்கே அணிக்கு விளையாடுவதற்கு முன் என்னை யாருக்குமே தெரியாது.தோனி போன்ற ஒரு ஜாம்பவானுடன் நேரத்தை செலவிடும்போது அது மிகவும் ஸ்பெஷல் ஆனது. அதுவும் இலங்கையில் இருந்து வரும் என்னை போல இளைஞர்களுக்கு அது வரப் பிரசாதம். இந்தியாவுக்கு எதிரான தொடர் நல்ல சவாலாக இருக்கும்.

இந்திய அணி தற்போது புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய வீரர்களை வைத்து விளையாடுகிறார்கள். உலக சாம்பியன் அணிக்கு எதிராக விளையாடுவதால் நிச்சயம் சவால்கள் காத்திருக்கும். அதே சமயம் எங்கள் அணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ind vs sl india squad cricket vs Matheesha Pathirana

கடந்த டி20 உலக கோப்பையில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் இந்திய தொடரை நாங்கள் கைப்பற்றினால், ஒரு அணியாக எங்கள் உத்வேகமும் நம்பிக்கையும் இனிவரும் காலத்தில் அதிகரிக்கும் என்று பதிரானா கூறினார். பதிரானா இதுவரை இலங்கை அணிக்காக 21 சர்வதேச போட்டிகளில் விளையாடி 31 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடியது கடவுள் தமக்குத் தந்த பரிசு என்று இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் மிக முக்கிய வீரராக கருதப்படும் பதிரானா அந்த அணி 2023 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற முக்கிய காரணமாக இருந்தார்.

தோனியின் தலைமையில் பதிரானா சிறப்பாக செயல்பட்டு 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் இந்தியா இலங்கை அணிக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பதிரானா இடம் பிடித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு நான் இலங்கை அணியில் சேர்க்கப்படவே இல்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் அறிமுகமான பிறகு, எனக்கு இலங்கை பிரதான அணியில் விளையாட அதிக வாய்ப்பு கிடைத்தது.சிஎஸ்கே அணியில் தோனி உடன் விளையாடியது கடவுள் எனக்கு கொடுத்த பரிசாக நினைக்கின்றேன்.

Story first published: Wednesday, July 24, 2024, 19:37 [IST]
Other articles published on Jul 24, 2024
English summary
Ind vs SL - Matheesha Pathirana says Playing with dhoni is Gift from God தோனியுடன் விளையாடியது கடவுள் தந்த பரிசு.. சிஎஸ்கேவால் தான் வாய்ப்பு வருகிறது.. பதிரானா நெகிழ்ச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+