மும்பை : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடர் 27ஆம் தேதி தொடங்குகிறது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் தொடர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த தொடரில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டி என இரண்டு அணிக்கும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த தேர்வு குழு தலைவர் அகார்கர் 15 பேர் கொண்ட அணியை மட்டும் தான் தேர்வு செய்ய முடியும் என்று கூறினார்.

இதனால் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய 21 வயது வீரரான திலக் வர்மாவுக்கு வாய்ப்பு தர தேர்வு குழுவினர் விரும்பியதாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதிரடி வீரரான திலக் வர்மா, கடந்த சில போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். எனினும் அவருக்கு நிரந்தர இடம் வழங்க கௌதம் கம்பீர் விரும்பியதாகவும் ஆனால் தற்போது அவர் காயம் ஏற்பட்டதால் மட்டுமே திலக் வர்மாவை சேர்க்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வேன் பராவிற்கு வாய்ப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரியான் பராக் பேட்டிங் மட்டுமல்லாமல் பந்து வீசவும் தெரியும் என்பதால் அவருக்கு இந்த முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மும்பை மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு விளையாடி வீரர்களை எல்லாம் தேர்வு செய்ய பரிந்துரை செய்திருக்கிறீர்கள். ஏன் ருதுராஜ்க்கு தேர்வு செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். திலக் வர்மாவை விட அனுபவத்திலும் திறமையிலும் ருதுராஜ் சிறந்து விளங்கிய நிலையில் அவர் பரிசளிக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இதனிடையே, இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் இனி பேட்டிங் மட்டும் போதாது பந்து வீசவும் வீரர்கள் கற்றுக்கொண்டு தேர்வு குழுவினருக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என சில கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.