Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இல்லை.. டெத் பவுலிங்கில் இவர் தான் கெத்து.. உலக அளவில் இந்திய வீரர் படைத்த சாதனை

மும்பை : டி20 கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றியை நிர்ணயிப்பது எப்போதுமே டெத் பவுலிங்காக தான் இருக்கும். 16 வது ஓவரிலிருந்து 20 வது ஓவர் வரை நடைபெறும் சம்பவங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும். குறிப்பாக ஒரு அணி சேசிங் செய்யும் போது டெத் பவுலிங்கில் வீரர்கள் எப்படி வீசுகிறார்கள் என்பதை பொறுத்து வெற்றி வாய்ப்பு இருக்கும்.

அந்த வகையில் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தனி ஆளாக நின்று இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பல போட்டிகளில் காப்பாற்றி இருக்கிறார். லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும், இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய வீரர் பும்ரா தான் வெற்றியை பெற்று தந்தார்.

Ind Vs SL Cricket T20 Cricket vs Arshdeep singh


இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை t20 கிரிக்கெட் வரலாற்றில் டெத் பவுலிங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் யார் என்று பார்த்தால், அதில் டாப் மூன்று இடத்தில் பும்ரா இல்லாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.அப்படி பும்ரா இல்லை என்றால் டாப் மூன்று இடத்தில் யார் இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் மற்றும் உலகில் நடைபெறும் அனைத்து டி20 போட்டிகளில் சேர்த்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் முதலிடத்தில் இருப்பவர் சிஎஸ்கே அணியின் ஸ்டார் வீரரும் இலங்கை வீரருமான மதிஷா பதிரானா தான்.இவர் 44 இன்னிங்ஸ்களில் டெத் பவுலிங் வீசி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சராசரியாக 11 பந்துக்கு ஒருமுறை விக்கெட் எடுத்திருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி. இவர் 61 இன்னிங்ஸில் இறுதி கட்டத்தில் பந்துவீசி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சராசரியாக 15 பந்துகளுக்கு ஒரு முறை விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங் தான். இவர் 53 இன்னிங்ஸ்களில் கடைசி கட்டத்தில் பந்து வீசி 46 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் 16 பந்துகளுக்கு ஒரு முறை ஆர்ஸ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பும்ராவை விட ஆர்ஸ்தீப் சிங் தான். இந்த கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு வழங்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.

Story first published: Sunday, July 28, 2024, 14:19 [IST]
Other articles published on Jul 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+