Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“தனி ஒருவன்” போராட்டம்..இலங்கை பவுலிங்கை இப்படியா துவம்சம் செய்வது..சூர்யகுமார் யாதவ் ஃபுல் ஃபார்ம்!

கொழும்பு: சரிவில் இருந்த இந்திய அணிக்கு தனது முதல் அரைசதம் மூலம் நம்பிக்கை கொடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி அணி கேப்டன் தசுன் சனகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இலக்கு

இலக்கு

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா 65 ரன்களும், அவிஷிங்கா 50 ரன்களும், கருணரத்னே 44 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை யுவேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் திணறினர். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 13 ரன்களுக்கும், ஷிகர் தவான் 29 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் 1 ரன்னும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

அரைசதம் விளாசல்

அரைசதம் விளாசல்

இந்திய அணியின் விக்கெட்கள் ஒருபுறம் சீட்டுக்கட்டு போல சரிந்தாலும், நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஒற்றை ஆளாக போராடினார். விக்கெட்டுகளுக்கு இடையேயும் அதிரடி காட்டி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை அவர் பூர்த்தி செய்தார். 44 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசினார்.

வாழ்த்து

வாழ்த்து

சர்வதேச வாய்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருந்த சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டி20 தொடரிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது தனது முதல் ஒருநாள் போட்டி தொடரிலும் அரை சதம் கடந்துள்ளதால் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Tuesday, July 20, 2021, 22:05 [IST]
Other articles published on Jul 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+